பஞ்சாயத்து தலைவரான துப்புரவு பணியாளர் – குவியும் வாழ்த்துக்கள்!!

0

பஞ்சாயத்து அலுவலகத்தில் துப்புரவு தொழிலாளராக இருந்து தற்போது பஞ்சாயத்து தலைவராகி உள்ள கேரளாவை சேர்ந்த பெண்மணிக்கு வாழ்த்துக்களும் பாராட்டுகளும் குவிந்து வருகின்றன.

துப்புரவு பணியாளர்:

தெற்கு கேரளாவில் கொல்லம் மாவட்டத்தில் உள்ள பத்தனம்புரம் பஞ்சாயத்தை சேர்ந்தவர் ஆனந்தவல்லி(46). பட்டியலினத்தை சேர்ந்த இவர் அங்குள்ள பஞ்சாயத்து அலுவலகத்தில் பகுதி நேர துப்புரவு தொழிலாளராக கடந்த 10ஆண்டுகளுக்கு மேல் பணிபுரிந்து வருகிறார். பள்ளி படிப்பை பாதியிலே விட்டுவிட்ட அவர் பஞ்சாயத்து அலுவலகத்தை சுத்தம் செய்யும் பணியில் ஆரம்பகால சம்பளமான ரூ.2000க்கு வேலை செய்து வந்திருக்கிறார். இந்நிலையில் சமீபத்தில் நடந்து முடிந்த உள்ளாடச்சி தேர்தலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பாக போட்டியிட்ட இவர் பஞ்சாயத்து தலைவராக தேர்ந்தேடுக்கப்பட்டுள்ளார். பதவி ஏற்பின் போது மிகவும் உணர்ச்சிவயப்பட்டவராக கண்கலங்கி விட்டார்.

இது பற்றி அவர் கூறும்போது, ” நான் மிகவும் ஏழ்மையான குடும்பத்தை சேர்ந்தவள். எனது கணவர் பெயிண்டராக பணிபுரிகிறார். எனது மொத்த குடும்பமும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினை சேர்ந்தவர்கள் தான். எனது கட்சியால் மட்டுமே இது சாத்தியமாகியுள்ளது. நான் என் கட்சிக்கு கடன்பட்டிருக்கிறேன். நான் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு இங்கு 2000 ரூபாய் சம்பளத்தில் துப்புரவாளர் பணிக்கு சேர்ந்தேன். தற்போது என் சம்பளம் ரூ.6000.

‘வேளாண் சட்டங்களை வாபஸ் பெற வேண்டும்’ – கேரளா சட்டப்பேரவையில் தீர்மானம்!!

இந்நிலையில் என் கட்சியின் வழிகாட்டுதலின் படி நான் தேர்தலில் நின்று வெற்றி பெற்றுள்ளேன். தற்போது எனது பொறுப்பு மிகவும் கூடியுள்ளது. இந்த பஞ்சாயத்தை முன்மாதிரியாக மாற்ற என்னால் முடிந்தவரை அனைத்தையும் செய்வேன். கஷ்டப்படும் மக்களின் வாழ்க்கை சிறப்பாக அமைய பாடுபடுவேன்” என தெரிவித்தார்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

கேரளாவில் மார்க்சிஸ்ட் காட்சியின் சார்பில் தேர்தலில் நின்று இதுவரை பல பெண்கள் ஜெயித்திருக்கிறார்கள். ஆனந்தவல்லியை போலவே கோழிக்கோடு மாவட்டத்தை ஒலவண்ண பஞ்சாயத்து தலைவராக சாருதி என்ற 22 வயது பெண் பதவி வகிக்கிறார். இவரை தொடர்ந்து, ரேஷ்மி மரியம் ஜாய், ராதிகா மஹாதேவன், அனீஸ் ஸ்டெபியா ஆகிய பெண்களும், மற்றும் பல பெண்களும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது ஆகும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here