அக்டோபரில் கொரோனா பாதிப்பு உச்சமடையும் – மாநில முதல்வர் எச்சரிக்கை!!

0
pinarayi-vijayan
pinarayi-vijayan

கேரள மாநிலத்தில் வரும் அக்டோபர் மாதம் கொரோனா பாதிப்பு உச்சமடையும் என நிபுணர்கள் தெரிவித்து உள்ளதாக முதல்வர் பினராயி விஜயன் எச்சரித்து உள்ளார். இதற்கான பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அரசு எடுத்து வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.

கொரோனா பாதிப்பு:

இந்தியாவில் முதன்முதலில் கொரோனா தொற்று கண்டறியப்பட்ட மாநிலம் கேரளா. ஆனால் தற்போது இருக்கும் நிலவரத்தின்படி, மற்ற மாநிலங்களுடன் ஒப்பிடுகையில் கேரளாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை குறைவாகவே உள்ளது. இதற்கு அம்மாநில அரசு எடுத்த தீவிர தடுப்பு நடவடிக்கைகள் தான் முக்கிய காரணம் ஆகும். இந்நிலையில் அடுத்த மாதம் மாநிலத்தில் கோவிட் -19 வைரஸ் தொற்றுகள் கடுமையாக உயரும் என்று நிபுணர்கள் எச்சரித்ததாகவும், இந்த முக்கியமான கட்டத்தில் தங்கள் பாதுகாப்பைக் குறைக்க வேண்டாம் என்று மக்களை கேட்டுக் கொள்வதாகவும் கேரள முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்து உள்ளார்.

ENEWZ – சமூக வலைதள பக்கங்களில் சேர கிளிக் பண்ணுங்க!!

“சில ஆய்வுகள் கோவிட் -19 தொற்றுகள் அக்டோபருக்குள் அதிகரிக்கும் என்று சுட்டிக்காட்டியுள்ளன. தினசரி பாதிப்பு எண்ணிக்கையில் வீழ்ச்சியைக் காரணம் காட்டி தங்கள் பாதுகாப்பைக் குறைக்கக்கூடாது. சோதனைகளின் எண்ணிக்கை குறைவாக இருப்பதால் பாதிப்பு எண்ணிக்கை குறைவாக கண்டறியப்படுகிறது. ஓணம் திருவிழாக்கள் காரணமாக சோதனைகள் குறைந்துவிட்டன” என முதல்வர் பினராயி விஜயன் கூறியுள்ளார்.

“கொரோனா உறுதி செய்யப்படுபவர்கள் விகிதம் 8% ஆக உள்ளது. இதை 5 ஆகக் குறைக்க வேண்டும். மொத்த வழக்குகளில் குறைந்தது 50 சதவீதம் கடந்த மாதத்தில் வந்தது. ஆகஸ்ட் மாதத்தில் தினமும் 10,000 க்கும் அதிகமாக பாதிப்புகள் இருக்கும் என்று முன்னர் சில வல்லுநர்கள் எச்சரித்திருந்தனர், ஆனால் அரசு அதை நன்றாக நிர்வகித்தது.

அரசு அலுவலகங்கள் சனிக்கிழமைகளிலும் இயங்கும் – தமிழக அரசு அதிரடி!!

கேரளாவில் இதுவரை 79,568 பேருக்கு கொரோனா உறுதியாகி உள்ள நிலையில் 57, 732 நோயாளிகள் கொடிய தொற்றுநோயிலிருந்து மீண்டு வீடு திரும்பி உள்ளனர். அதே நேரத்தில் தற்போது 21,516 பேர் சிகிச்சையில் உள்ளனர். கடந்த 24 மணிநேரத்தில் மேலும் 10 பேர் உயிரிழந்த நிலையில், கோவிட் -19 இறப்பு எண்ணிக்கை 316 ஆக உயர்ந்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here