மஞ்சள் வண்ண உடையில் தேவதையாய் ஜொலிக்கும் கீர்த்தி சுரேஷ் – சொக்கி போன ரசிகர்கள்!!

0

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகையாக இருக்கும் நடிகை கீர்த்தி சுரேஷ் தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் லேட்டஸ்டாக புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இதனை அடுத்து அந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றது.

நடிகை கீர்த்தி சுரேஷ்

தமிழ் மட்டுமின்றி தெலுங்கு உள்ளிட்ட பல மொழி திரைப்படங்களில் நடித்து மக்கள் மத்தியில் தனக்கு என்று ஒரு பெயரினை எடுத்தவர் தான் நடிகை கீர்த்தி சுரேஷ். சினிமா பின்னணி கொண்ட குடும்பத்தில் இருந்து பிறந்திருந்தாலும், இவருக்கு அவ்வளவு எளிதாக பட வாய்ப்புகள் கிடைத்து விடவில்லை. இவர் தமிழில் முதன் முதலாக நடிகர் சிவகார்த்திகேயனுடன் “ரஜினி முருகன்” திரைப்படத்தில் தான் நடித்தார்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

அந்த திரைப்படத்தில் தனது யதார்த்தமான நடிப்பின் காரணமாக ஆரம்பத்திலேயே தனக்கு என்று ஒரு ரசிகர் கூட்டத்தினை உருவாக்கி கொண்டார். பின், தொடர்ச்சியாக முன்னணி நடிகர்களின் திரைப்படங்களில் நடித்தார். இவரது சினிமா பயணத்தில் மிகவும் முக்கியமான திரைப்படமாக பார்க்கப்படுவது, “மகாநதி” திரைப்படம் தான்.

இந்த திரைப்படத்திற்காக கீர்த்தி சுரேஷ் மிகவும் கடுமையாக உழைத்தார் என்று தான் கூற வேண்டும். இந்த திரைப்படத்திற்கு பின், அவர் அனைத்து மொழி திரையுலகிலும் மிகவும் முக்கியமான நடிகையாக பார்க்கப்பட்டார்.

ஐபிஎல்-லில் குக் வித் கோமாளி பிரபலங்களா?? இணையத்தில் வைரலாகும் புகைப்படம்!!

தற்போது பல திரைப்படங்களில் நடித்து வரும் கீர்த்தி சுரேஷ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மஞ்சள் வண்ண சேலையில் இருக்கும் புகைப்படம் ஒன்றினை பதிவிட்டுள்ளார். இதனை அடுத்து அந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here