விஜய் டீவியை விட்டு வேறு சேனலுக்கு செல்லும் வெங்கட் பட் – அவரே வெளியிட்ட பதிவு!!

0

விஜய் டிவியில் பிரபலமாக ஒளிபரப்பாகி வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூலம் பிரபலமான வெங்கட் பட் வேறு சேனலுக்கு செல்ல உள்ளார். இதனை அவரே தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

குக் வித் கோமாளி வெங்கட்

சமையல் நிகழ்ச்சி என்றாலே மக்கள் மத்தியில் பிரபலமாக இருந்து வருகிறது. விஜய் டிவியில் ‘சமையல் சமையல்’ என்ற நிகழ்ச்சியில் ஆரம்பித்து தற்போது குக் வித் கோமாளி நிகழ்ச்சி வரை வெற்றிகரமாக ஓடிக்கொண்டுள்ளது. இதற்கு காரணம் சமையலில் மக்களுக்கு இருக்கும் மோகம் தான். தற்போது பல யூடுப் சேனல்களில் சமையல் அல்லது ஃபுட் சாலஞ்ச் தான் பிரபலமாக ஓடிக்கொண்டுள்ளது.

பலரும் இதனை பார்ட் டைம் வேலையாகவே மாற்றி விட்டனர். இப்படி இருக்க விஜய் டிவி புதிய கான்செப்ட்டில் காமெடி நிகழ்ச்சியுடன் குக்கிங் ஷோவை உருவாக்கியுள்ளனர். இந்த நிகழ்ச்சி தற்போது ட்ரெண்டில் உள்ளது. விஜய் டிவிக்கு டிஆர்பியை தூக்கி நிறுத்தியது.

ஐபிஎல்-லில் குக் வித் கோமாளி பிரபலங்களா?? இணையத்தில் வைரலாகும் புகைப்படம்!!

இந்த நிகழ்ச்சியில் தொகுத்து வழங்கும் செஃப் வெங்கட் பட் வேறு சேனலுக்கு செல்ல உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனை அவரே தனது இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதாவது குக் வித் கோமாளி நிகழ்ச்சி கன்னடத்தில் குக் வித் கிறுக்கு என்று ஆரம்பித்துள்ளனர். அதில் வெங்கட் பட்டும் கலந்துக்கொள்ள இருக்கிறார். அந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

குக் வித் கிறுக்கு விடியோவை காண இங்கே கிளிக் செய்யவும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here