டி-ஷர்ட்டில் புகைப்படத்தை வெளியிட்ட கீர்த்தி சுரேஷ் – ஹலோ துபாயா?? கலாய்க்கும் நெட்டிசன்கள்!!

0

தென்னிந்திய திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் கீர்த்தி சுரேஷ். தற்போது உடல் எடையை குறைந்துள்ள கீர்த்தி தொடர்ந்து பல புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். தற்போது துபாயில் இருந்து அவர் வெளியிட்ட புகைப்படம் வைரலாகி வருகிறது. மேலும் கீர்த்தியை கலாய்த்தும் கமன்ட் செய்து வருகின்றனர்.

கீர்த்தி சுரேஷ்

தமிழில் வெளியான ‘இது என்ன மாயம்’ திரைப்படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமானவர் கீர்த்தி. இவரின் தாயாரும் பிரபல நடிகை என்பதால் மக்களுக்கு எளிதில் பரிட்சயம் ஆனார். ஆனால் கீர்த்திக்கு முதல் படம் தோல்வியில் தான் முடிந்தது.

அதன் பிறகு அவர் சிவகார்த்திகேயனுடன் இணைந்து நடித்த ‘ரஜினி முருகன்’ திரைப்படம் செம ஹிட் அடித்தது. இந்த படம் அவரின் கேரியரையே தூக்கி நிறுத்தியது. சிவகார்த்திகேயனுக்கு சரியான ஜோடியாக அமைந்தார் கீர்த்தி. இந்த படத்தில் கீர்த்தியை மக்களுக்கு மிகவும் பிடித்தும் போனது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

தொடர்ந்து பல படங்களில் நடிக்க ஆரம்பித்தார். அதன் பிறகு தொடரி திரைப்படமும் மெகா ஹிட் அடித்தது. அடுத்தடுத்த வெற்றி படங்களை கொடுத்து வந்ததால் இவருக்கென்று பெரிய ரசிகர்கள் கூட்டமே உருவானது. மேலும் மக்கள் மத்தியிலும் நீங்காத இடத்தை பிடித்தார்.

ஒரு குறுகிய காலகட்டத்தில் ஒரு நடிகை இப்படி ஒரு இடத்தை பிடிப்பது என்பது ஆச்சரியமான விஷயம் தான். தமிழில் மட்டுமல்ல, தெலுங்கு, மலையாளம் என பல மொழிகளில் கலக்கி வந்தார். முன்னணி நடிகைகளே அதிரும் அளவிற்கு இவரின் வளர்ச்சி இருந்தது.

டாக்டராக ரீஎன்ட்ரி கொடுக்கும் துர்கா – அப்போ வெண்பாவிற்கு ஆப்பு நிச்சயம்!

எடுத்த எடுப்பிலேயே விஜய் உடன் ஜோடி சேர்ந்தார் கீர்த்தி. ஆனால் சில காலமாக கீர்த்திக்கு வாய்ப்புகள் குறைந்து விட்டது என்றே சொல்லலாம். கீர்த்தியின் அந்த பப்ளி மாஸ் உடலமைப்பு தான் மக்களுக்கு பிடித்து போனதற்கே காரணம். ஆனால் கீர்த்தி திடீரென உடலை குறைக்கிறேன் என்று சொல்லி ஆள் அடையாளமே தெரியாமல் மாறி போனார்.

என்ன கீர்த்தி இது என அனைவரும் ஷாக் ஆக தான் செய்தனர். வாய்ப்புகளும் குறைய ஆரம்பித்தது. ஆனாலும் தமிழ், மலையாளம் மற்றும் தெலுங்கு என மூன்று படங்கள் வெளியாவதற்கு காத்திருக்கிறது. இப்பொழுதெல்லாம் பழைய ரேஞ்சுக்கு வந்துள்ளார் கீர்த்தி.

என்ன தான் எடையை குறைந்திருந்தாலும், சற்று பூசினார் போல தான் இப்போதெல்லாம் புகைப்படத்தை வெளியிடுகிறார். இந்நிலையில் தற்போது துபாய்க்கு சென்றிருக்கும் கீர்த்தி ஹலோ துபையா என்று எழுதியிருக்கும் வெள்ளை நிற டி-ஷர்ட் அணிந்தவாறு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். பலரும் அவரை கிண்டலடித்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here