நடிகை சித்ராவுடன் நெருக்கமானவர்களிடம் இன்று விசாரணை- ஆர்.டி.ஓ திவ்யஸ்ரீ முடிவு!!

0

சின்னத்திரை நடிகை சித்ராவின் தற்கொலை தொடர்பாக நடைபெற்று வரும் வழக்கில் இன்று அவருக்கு நெருக்கமானவர்கள் மற்றும் கடைசியாக பணியாற்றியவர்களிடம் இன்று விசாரணை நடத்த இருப்பதாக ஆர்,டி.ஓ தரப்பில் முடிவு செய்யப்பட்டுள்ளது.

சித்ரா

சின்னத்திரை நடிகை சித்ரா கடந்த வாரம் சென்னை நசரத்பேட்டையில் உள்ள ஒரு தனியார் விடுதியின் அறையில் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டார். அப்போது அவரது கணவர் ஹேம்நாத் அவருடன் தான் இருந்துள்ளார். இதனால் போலீசார் அவரை விசாரணையில் வைத்திருந்தனர்.

நடிகை சித்ரா கடந்த 10 வருட கடின உழைப்பின் மூலம் சின்னத்திரை உலகின் முக்கிய இடத்திற்கு வந்தவர். இவர் ஆரம்ப காலத்தில் தொகுப்பாளர் பணி மற்றும் குறும்படங்களில் நடித்து வந்தார். விஜய் டீவியில் பாண்டியன் ஸ்டோர்ஸ் என்ற நாடகத்தில் நடித்ததன் மூலம் புகழின் உச்சிக்கு சென்று மக்கள் மனதில் நீங்கா இடத்தை பிடித்து விட்டார் என்றே சொல்லலாம்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

இவரின் மரண செய்தி கேட்ட அனைவரையுமே அதிர வைத்தது. இந்நிலையில் சித்ராவிற்கு கடந்த அக்டோபர் மாதம் பதிவு திருமணம் நடந்து விட்டதாக அவர் இறந்த பின் தான் தெரிய வந்தது. திருமணமாகி சில மாதங்களிலேயே அவர் இறந்து விட்டதால் அவரது தற்கொலை வழக்கு ஆர்.டி.ஓ. விசாரணைக்கு சென்றது.

இந்த வழக்கை விசாரிப்பதற்காக ஆர்.டி .ஓ. திவ்யஸ்ரீ நியமிக்கப்பட்டுள்ளார். திங்கள் கிழமையில் இருந்து நடைபெற்று வந்த ஆர்.டி.ஓ விசாரணையில் இதுவரை சித்ராவின் பெற்றோர், அவரது சகோதரர், அவரது சகோதரி மற்றும் கணவர் ஹேம்நாத்தின் பெற்றோர் ஆகியோரிடம் விசாரணை முடிந்திருக்கிறது.

சித்ராவின் கணவர் ஹேம்நாத் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ளார். இதனால் அவரை விசாரிக்க சிறை அதிகாரிகளுக்கு கடிதம் அனுப்பி ஆர்.டி.ஓ. விசாரணைக்கு அவரை நேற்றுமுன்தினம் அழைத்து சென்றனர். இந்த விசாரணை 8 மணி நேரம் தொடர்ந்து நடந்தது.

இந்நிலையில் இன்றைய ஆர்.டி.ஓ. விசாரணை சித்ராவின் நண்பர்கள், அவருக்கு நெருக்கமானவர்கள், கடைசியாக அவருடன் பணியாற்றியவர்கள் மற்றும் சித்ரா தற்கொலை செய்து கொண்ட விடுதியில் பணியாற்றுபவர்கள் ஆகியோரிடம் நடைபெற இருப்பதாக ஆர்.டி .ஓ.திவ்யஸ்ரீ தகவல் தெரிவித்து உள்ளார். இதனால் அவர்கள் அனைவரும் நேரில் ஆஜராக வேண்டும் கூறப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here