கீழடி அகழ்வாராய்ச்சி 6ம் கட்ட பணிகள் – ஜன.21க்குள் தொடங்கும்

0
Keeladi

தமிழ்நாட்டின் சிவகங்கை மாவட்டத்தில் உள்ள திருப்புவனம் ஊராட்சிக்குட்பட்ட கீழடியில் தமிழ்நாட்டில் இதுவரை இல்லாத அளவு பெரிய அகழ்வாராய்ச்சி நடந்து கொண்டுவருகிறது. கீழடி வைகை நதிக்கரைக்கு மிக அருகில் இருப்பதால் நகர நாகரிகத்தில் சிறந்த விளங்கியதர்கான தெளிவு கிடைத்துள்ளது. செங்கல் கட்டுமானத்தில் வீடுகள், வடிகால் அமைப்புகள், தொழில் கூடங்கள் மற்றும் வணிகம் ஆகியவற்றை பார்க்கும் போது இரண்டாம் நகர நாகரிகம் கங்கை சமவெளி பகுதிகளில் தோன்றும்போது அல்லது அதற்க்கு முன்னதாகவே இங்கு இரண்டாம் நகர நாகரிகம் தோன்றி இருக்கக்கூடும் என்று கருதப்படுகிறது. இங்கு 40க்கும் மேற்பட்ட குழிகள் தோண்டப்பட்டு பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.

இங்கு ஆறாம் கட்ட அகழ்வாராய்ச்சிப் பணிகள் வரும் ஜனவரி 21க்குள் தொடங்கும் என அமைச்சர் பாண்டியராஜன் அவர்கள் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here