ரத்தக்கறையுடன் Lift க்குள் கவின் மற்றும் அம்ரிதா.! லிப்ட் படத்தின் பர்ஸ்ட் லுக்.!

0

விஜய் டிவியின் பிரபல சீரியல் ஆன சரவணன் மீனாட்சியில் நடித்து பிரபலமானார் கவின். அதை அடுத்து அவர் பிக் பாஸ்சில் கலந்து கொண்டு அதை விட புகழை அடைந்தார். தற்போது பிக் பாஸ்ஸிற்கு பிறகு பிகில் நாயகி அம்ரிதா ஐயர் உடன் படத்தில் நடிப்பதாக செய்திகள் வெளியானது. இந்நிலையில் கவின் சமூக வலைதளத்தில் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டுள்ளார்.

கவின் சினிமா வாழ்க்கை..!

சரவணன் மீனாட்சியில் பிரபலமான கவின் அதற்கடுத்து நட்புனா என்னனு தெரியுமா படத்தில் நடித்திருந்தார். அது அந்த அளவிற்கு அவருக்கு கைகொடுக்கவில்லை. அதற்கடுத்து தான் அவர் பிக் பாஸ்ஸில் கலந்து கொண்டார். அதில் அவர் செய்த சில செயல்கள் அனைவரும் வெறுக்கும் படியாக இருந்தது, இருந்தபோதிலும் அவருக்கு ஆதரவும் தெரிவித்தனர்.

சாக்ஷியுடன் அவருக்கான மோதல் மற்றும் லாஸ்லியாவுடன் காதல் இவ்வாறு பலமுகங்களுடன் பிக் பாஸ் வீட்டில் இருந்தார். அதிகப்படியான எதிர்ப்பு இருந்தபோதிலும் ஆதரவும் அதிகமாகவே இருந்தது.

பர்ஸ்ட் லுக் போஸ்ட்

தற்போது கவின் நடித்து வரும் லிப்ட் படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியாகி உள்ளது.கவின் தன் ட்விட்டர் பக்கத்தில் அதனை வெளியிட்டுள்ளார். அந்த பர்ஸ்ட் லுக் போஸ்டர் பார்க்கும்போது இது ஒரு திரில்லர் திரைப்படமாக இருக்கும் என்று கருதப்படுகிறது. அதில் ரத்தத்துடன் லிப்ட்டில் இருவரும் அமர்ந்தபடி இருந்தனர்.

இதைவைத்து பார்க்கும்போது இது விசாரணை சம்பந்தப்பட்ட படமாக இருக்கும் என்று நம்புகிறோம். இப்படத்தால் கவினுக்கு நல்ல வரவேற்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

To Subscribe Youtube Channel Click Here
To Join WhatsApp Group Click Here
To Join Telegram ChannelClick Here

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here