கோவிட்-19 தொற்றால் கர்ப்பிணி துணை காவல் ஆய்வாளர் உயிரிழப்பு – கர்நாடகாவில் நிகழ்ந்த சோகம்!!!

2
கர்நாடகாவில் துணை காவல் ஆய்வாளராக பணிபுரிந்தவர் ஷாமிலி. இவருக்கு வயது 28 மற்றும் இவர் 7 மாத கர்ப்பிணி. தற்போது இவர் கொரோனா வைரஸ் தொற்றால் பலியாகி உள்ளார். இது அப்பகுதி மக்களிடையே ஆழ்ந்த சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
கோவிட்-19 தொற்றால் கர்ப்பிணி துணை காவல் ஆய்வாளர் உயிரிழப்பு:
 
இவர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டபின் கோலாரில் உள்ள ஆர்.எம்.ஜலப்பா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். இவர் கர்ப்பமாக உள்ள காரணத்தினால் கொரோனா தடுப்பூசியை செலுத்திக்கொள்ளவில்லை. பிறகு இவரது நிலைமை படிப்படியாக மோசமடைந்து இன்று இவர் இந்த பெருந்தொற்றுக்கு பலியாகி உள்ளார். நாடு முழுவதும் கொரோனா இரண்டாம் அலை பரவி வருகிறது. ஊரடங்கினாலும், கொரோனா வைரஸ் தடுப்பூசியாலும் சமீப நாட்களாக இதன் தாக்கம் சற்று குறைந்து இருந்தாலும் இதனால் இறப்பை தழுவும் மக்களின் செய்தி நாள்தோறும் வந்த வண்ணமே உள்ளன.
இந்திய அரசும் மக்களை இந்த தொற்றிலிருந்து காப்பாற்ற பல்வேறு திட்டங்களை செயல்படுத்திவருகிறது. இவ்வாறாக உள்ள நிலையில் கர்நாடகா மாநிலத்தில் கர்ப்பிணி துணை காவல் ஆய்வாளர் இக்கொடிய நோயால் இறப்பை தழுவியுள்ள சம்பவம் இணையத்தில் பரவி சோகத்தை ஏற்படுத்தி உள்ளது

2 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here