முழு ஊரடங்கு நீட்டிப்பு – கர்நாடகா முதல்வர் அதிரடி அறிவிப்பு!!!

0

கொரோனா நோய் தொற்று மக்களை அதிகமாக பாதிப்பதால் கர்நாடகாவில் முழு ஊரடங்கு ஜூன் 7 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

முழு ஊரடங்கு நீட்டிப்பு:

கர்நாடகாவில் நாளுக்கு நாள்  COVID-19 வழக்குகள் மற்றும் இறப்புகள் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், அம்மாநில முதல்வர்  ஜூன் 7 ஆம் தேதி வரை ஊரடங்கை நீட்டித்துள்ளார். ஏற்கனவே அமலில் உள்ள முழு ஊரடங்கு மே 24 ஆம் தேதி முடிவடைய இருந்த நிலையில்; இப்போது ஜூன் 7 ஆம் தேதி காலை 6 மணிக்கு நிறைவடையும் என்று முதலமைச்சர் பி எஸ் யெடியுரப்பா அறிவித்தார்.

மேலும் காலை 10 மணிக்குப் பிறகு வெளியே செல்வதை கண்டித்து எடியூரப்பா மக்களை எச்சரித்தார். காலை 10 மணிக்குப் பிறகு மக்கள் சுற்றித் திரிகிறார்கள், இதனால் மாநிலம் முழுவதும் மேலும் கொரோனா தொற்று அதிகமாக உருவாகி வருகிறது. அதனால்தான் தேவையில்லாமல் வெளியே செல்வதை நிறுத்துமாறு மக்களை நான் கேட்டுக்கொள்கிறேன்,” என்று அவர் கூறினார்.

இன்றைய கணக்கெடுப்பின் படி கொரோனா தொற்று காரணமாக; மொத்த தொற்றுகள் மற்றும் இறப்புகள் முறையே 23,67,742 மற்றும் 24,207 ஆகும்; மற்றும்  32,218 புதிய வழக்குகள் மற்றும் 353 இறப்புகள் பதிவாகியுள்ளன. இவற்றில் பெங்களூரு நகரத்தில் மட்டும் 2,89,131 வழக்குகள் உள்ளன; கிட்டத்தட்ட பெங்களூரில் மட்டுமே 10,656 பேர் உயிரிழந்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here