இந்திய விஞ்ஞானிகள் சாதனை – உடலின் நோய் எதிர்ப்புச்சக்தியை அளவிட கருவி கண்டுபிடிப்பு!!!

0

உடலில் கொரோனா தாக்குதல் ஏற்பட்ட பிறகு உற்பத்தியாகும் ஆன்டிபாடிகளை அளவிடும் கருவி தற்போது முற்றிலும் உள்நாட்டு விஞ்ஞானிகளைக் கொண்டு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதன்முலம் நோயாளியின் உடல் நிலைக்கு ஏற்ப சிகிச்சையை மருத்துவர்கள் வழங்குவர்.

ENEWZ  WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

இந்த கருவி முழுக்க முழுக்க இந்திய விஞ்ஞானிகளைக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. இந்தக் கருவியை பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பின் (DRDO) கீழ் செயல்படும் உடலியல் மற்றும் அதன் சார்பு அறிவியல் தொடர்பான பாதுகாப்பு நிறுவனமும், டெல்லியை சேர்ந்த வான்கார்டு டயாக்னஸ்டிக் நிறுவனமும் இணைந்து கண்டுபிடித்துள்ளன. இந்த கருவியை பயன்படுத்தி கொரோனா வைரஸ் தொடர்பான ஆன்டிஜென்களை வைத்து, மனித சீரம் அல்லது பிளாஸ்மாவில் உள்ள நோய் எதிர்ப்பு பொருட்களை கண்டறிய முடியும்.

இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் சென்ற மாதம் இக்கருவியை விற்பனைக்காக தயாரிக்கவும், வினியோகிக்கவும் அனுமதி அளித்துள்ளது. இந்நிலையில் இந்திய தலைமை மருந்து கட்டுப்பாட்டு இயக்குனரகம், மத்திய மருந்து தரக்கட்டுப்பாட்டு நிறுவனம், மத்திய சுகாதார அமைச்சகம் ஆகியவை ஒப்புதல் அளித்துள்ளன. இந்த கருவியை 18 மாதங்கள் வரை உபயோகிக்க முடியும். மேலும் இக்கருவி 75 நிமிடங்களில் நோயாளியின் நோய் எதிர்ப்பு சக்தியை அளவிடும்.

கொரோனா வைரஸிலிருந்து மக்களை காப்பாற்ற மருத்துவர்கள் போராடி வரும் வேலையில் நமது இந்திய விஞ்ஞானிகள் இக்கருவியை கண்டுபித்துள்ளனர். இதற்காக DRDO தலைவர் சதீஷ் ரெட்டியும், ராணுவ அமைச்சர் ராஜ் நாத் சிங்கும் பாராட்டு தெரிவித்துள்ளனர்.

Facebook   => Like செய்ய கிளிக் பண்ணுங்க!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here