முதல்வர் பதவியை ராஜினாமா செய்ய தயார்… மாநிலத்தில் மீண்டும் குழப்பம்!!!

0

கர்நாடகா முதல்வர் எடியூரப்பா கட்சி மேலிடம் கேட்டுக் கொண்டால் முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்ய தயார் என்று அறிவித்துள்ளது தற்போது அந்த மாநிலத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ENEWZ  WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

கர்நாடகா மாநிலத்தில் கடந்த 2018ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் மஜத கட்சியின் மாநில தலைவராக இருந்த குமாரசாமி முதல்வராக பொறுப்பேற்றார். பின்னர் சில பிரச்சனைகள் காரணமாக அக்கட்சிகளை சேர்ந்த எம்.எல்.ஏக்கள் ராஜினாமா செய்தனர். அதையடுத்து, சட்டப்பேரவையில் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் குமாரசாமி அரசு தோல்வியை சந்தித்ததால், பாஜகவின் எடியூரப்பா முதல்வராக பொறுப்பேற்றார்.

கர்நாடகா முதலமைச்சர் B.S. எடியூரப்பா மீது அவரது கட்சியை சார்ந்த எம்.எல்.ஏ.க்கள் அதிருப்தியில் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. பாஜக மாநில துணைத் தலைவரும், எடியூரப்பாவின் மகனுமான விஜேந்திராவின் தலையீடு ஆட்சியில் அதிகமாக இருப்பதாக குற்றம் சாட்டப்படுகிறது. இதனால், கர்நாடக பாஜகவில் உட்கட்சி பூசல் நிலவி வருகிறது.

இந்த நிலையில், கட்சி மேலிடம் கேட்டுக் கொண்டால் முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்ய தயார் என்று B.S. எடியூரப்பா அறிவித்துள்ளார். அதுவரைக்கும் கர்நாடக முதலமைச்சர் பதவியை தான் தொடரப் போவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இவரது அறிவிப்பு கர்நாடகா மாநிலத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Facebook   => Like செய்ய கிளிக் பண்ணுங்க!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here