பிகினி உடையில் கன்னட கொடி….அமேசானுக்கு எதிராக வழக்கு!!!

0

அமேசானில் கன்னட கொடி மற்றும் முத்திரையுடன் உள்ள பிகினி உடைகள்  விற்கப்படுவதற்கு கர்நாடக அரசு மற்றும் அங்குள்ள அமைப்புகள் தங்களின் கண்டனத்தை தெரிவித்து உள்ளன. மேலும் அந்த நிறுவனத்தின் மீது வழக்கு தொடரவும் முடிவு செய்து உள்ளதாக அந்த மாநில அரசு தெரிவித்துள்ளது.

ENEWZ  WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

மேலும், சில நாட்களுக்கு முன்பு கன்னட மொழியின் தன்மை குறித்து தேடிய போது, அதில் ‘உலகின் இழிவான மொழி கன்னடம்’ என ஆங்கிலத்தில் குறிப்பிடப்பட்டு இருந்தது. அதற்கு எதிர்ப்பு கிளம்பியது. இதையடுத்து  கூகுள் நிறுவனம் மன்னிப்புக் கேட்டு கொண்டது. இந்நிலையில்  இணையவழி விற்பனையில் மிக பெரிய நிறுவனமாக இருக்கும் அமேசான் ஒரு புதிய சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

கர்நாடக மாநில கொடியில் இடம் பெற்றுள்ள மஞ்சள் ,சிவப்பு வண்ணம் மற்றும் அந்த மாநில சின்னமான இரு தலைப் பறவை ஆகியவை அந்த பிகினி உடையில் உள்ளன. இதற்கு கர்நாடக அரசு மற்றும் அங்கு உள்ள பல்வேறு தரப்பினரும்  எதிர்ப்பை தெரிவித்து உள்ளனர். இதுகுறித்து அந்த மாநில கலாச்சார துறை அமைச்சர் அரவிந்த் லிம்பாவலி கூறுகையில் ‘கர்நாடக மாநிலத்தின் சுயமரியாதையை கேள்விக்குறியாக்கும் வகையில் இந்த செயல் உள்ளது. இதனை அரசு ஒருபோதும் ஏற்றுக் கொள்ளாது. இதற்காக இந்த நிறுவனம் மன்னிப்பு கேட்க வேண்டும். கூகுளின் மொழி பிரச்சனை முடிவுக்கு வருவதற்கு முன்பாக அமேசானும் இப்படி கன்னட மக்களை இழிவுபடுத்தும் ஒரு  செயலில் இறங்கி உள்ளது. இதனால் அந்த நிறுவனத்திற்கு எதிராக கர்நாடக மாநில அரசு வழக்கு தொடரும்’ என்று கூறியுள்ளார்.

Facebook   => Like செய்ய கிளிக் பண்ணுங்க!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here