ஊரடங்கை நீட்டிப்பது நல்லது – மந்திரி நிபந்தனை!!!

0

கர்நாடகா மாநிலத்தில் மீண்டும் ஊரடங்கை நீட்டிப்பது நல்லது என்று மந்திரி ஆர்.அசோக் கூறுகிறார்.

ஊரடங்கை நீட்டிப்பது நல்லது:

நாடு முழுவதும் கொரோனா 2ஆம் பரவலின் தாக்கம் வேகமெடுக்கிறது. தமிழகம் மட்டுமல்லாமல் கர்நாடகத்தில் கொரோனா வைரஸ் அதிவேகமாக பரவி வருகிறது. இதனால் அந்த மாநிலத்தின் முதல்-மந்திரி எடியூரப்பா முழு ஊரடங்கை அமலுக்கு கொண்டு வந்தார். கொரோனா பரவலை கட்டுப்படுத்த இந்த ஊரடங்கு மே 11 முதல் அமலுக்கு வந்தது.

இந்த ஊரடங்கு வருகிற மே 24-ந் தேதி காலை 6 மணியுடன் முடிய உள்ளது. இருந்த போதிலும் மாநிலத்தில் கொரோனா பரவல் இன்னும் முழுமையாக கட்டுக்குள் வரவில்லை. இது குறித்து மந்திரி ஆர்.அசோக் கூறுகையில்; மராட்டிய மாநிலத்தில் கொரோனா தொற்றின் வேகம் இன்னும் குறையாத நிலையில் அம்மாநிலத்தின் முதல்வர் ஊரடங்கை நீடித்துள்ளார்; இதனால் அங்கு கொரோனா பரவல் வெகுவாக குறைந்துள்ளது.

எனவே நாமும் நம் மாநிலத்தின் நலன் கருதி மே 24-ந் தேதியில்  முடிய இருக்கும் ஊரடங்கை மேலும் நீட்டிப்பது நல்லது என்று மந்திரிகள் உள்பட எதிர்க்கட்சி தலைவர்கள் மற்றும் வருவாய்த்துறை மந்திரி ஆர்.அசோக் ஆகியோர் தெரிவித்துள்ளனர். இது குறித்த அதிகார பூர்வமான முடிவை முதல்-மந்திரி எடியூரப்பா எடுப்பார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here