சன் டிவி ‘கண்ணான கண்ணே’ சீரியலில் இணைந்த பிக் பாஸ் பிரபலம் – யாருனு நீங்களே பாருங்க!!

0

சன் டிவியில்  கண்ணான கண்ணே  சீரியல் பிரபலமாக  ஒளிபரப்பாகி வருகிறது. இந்நிலையில்  இந்த  சீரியலில்  விஜய் டிவியின்  பிக் பாஸ்  நிகழ்ச்சியில்  கலந்துகொண்ட பிரபலம் இணைந்துள்ளார்.

கண்ணான கண்ணே 

சன் டிவியில்  ‘கண்ணான கண்ணே’  சீரியலில் பிரபலமாக ஒளிபரப்பாகி  வருகிறது. மீரா  தனது  அப்பா  கௌதமின்  பாசத்திற்காக  ஏங்கி  வருகிறார்.  யமுனா என்ன தான் கௌதமின்  இரண்டாவது  மனைவியாக  இருந்தாலும்  தனக்கு  வாழ்க்கை  கொடுத்தது  மீரா தான்  என்று  தன்  மகளை  விட  அவர்  மீது  பாசத்தை  கொட்டி  வருகிறார்.

தற்போது  கௌதம்  யுவாவிற்கு ப்ரீத்தியை  திருமணம்  செய்து  வைக்க முடிவெடுத்து  விட்டார். ஆனால் மீராவும், யுவாவும் தான் காதலித்து  வந்தனர். இப்பொழுது  ப்ரீத்தி மற்றும் யுவாவின்  திருமண  வைபோக  நிகழ்ச்சி  தான்  பிரபலமாக  ஒளிபரப்பாகி  வருகிறது.

யுவா  யார்  கழுத்தில்  தாலி  கட்ட  போகிறார் என்ற  விறுவிறுப்பான சம்பவங்கள்  நடந்து  வருகிறது. இதில்  சன்  டீவியை  சேர்ந்த  சீரியல்  நடிகர், நடிகைகள்  கலந்துகொண்டுள்ளனர். மேலும்  விஜய் டிவியில்  பிக் பாஸ்  நிகழ்ச்சியில்  கலந்துகொண்ட கணேஷ் வெங்கட்ராம்  இந்த  சீரியலில் கல்யாண  வைபோகத்தில்  இணைந்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here