‘நவரசா’ ஆந்தாலாஜி டீசர் வெளியீடு…!மீண்டும் ஓடிடியில் வருகிறது சூர்யாவின் படம்!!

0

ஒன்பது உணர்வுகள் மையமாக கொண்ட ஒன்பது குறும்படங்கள் உள்ளடக்கிய   ‘நவரசா’ ஆந்தாலாஜி என்ற படத்தை  இயக்குனர் மணிரத்னம் மற்றும்  ஜெயந்திரா சேர்ந்து தயாரித்து உள்ளனர். இதில் நடிகர் சூர்யாவின் படமும் ஒன்று. அந்த வகையில் தற்போது அந்த படத்திற்கான டீசர் இன்று வெளியாகி உள்ளது.

நவரசம் என்பது மனிதனின் நகை , அழுகை , அச்சம் ,  அமைதி  உள்ளிட்ட ஒன்பது உணர்வுகளை குறிப்பதாகும். இந்த ஒன்பது உணர்வுகளை மையமாக வைத்து 9 கதைகள், 9 இயக்குனர்கள் மற்றும் 9 இசையமைப்பாளர்களை கொண்டு தயாரிக்கப்படும் படம் தான்  ‘நவரசா’ ஆந்தாலாஜி. இதை மணிரத்னம் மற்றும்   ஜெயந்திரா சேர்ந்து தயாரிக்க, கெளதம் மேனன், அரவிந்த்சாமி, பிரியதர்ஷன், கார்த்திக் நரேன், வஸந்த் சாய், கார்த்திக் சுப்புராஜ், பிஜோய் நம்பியார், சர்ஜூன், ரவீந்திரன் பிரசாத் போன்ற 9 இயக்குனர்கள் தனித்தனி கதையில் இயக்கி உள்ளனர். மேலும் இந்த படம் ஓடிடியில் வெளியாக உள்ளது.

இந்நிலையில் இந்த ‘நவரசா’ ஆந்தாலஜி சூர்யா,விஜய் சேதுபதி, அரவிந்த் சாமி, பிரசன்னா, சித்தார்த், பார்வதி, ரோகிணி, ரித்விகா, யோகி பாபு, பாபி சிம்ஹா போன்ற பல முன்னணி நடிகர்களும் நடித்து உள்ளனர்.மேலும் இதற்கான டீசர் இன்று காலை வெளியாகியுள்ளது. இதை தொடர்ந்து வருகிற ஆகஸ்ட் 6ம் தேதி நவரசா ஆந்தாலஜி படம்  நெட்ஃப்ளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகிறது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here