மீண்டும் வருகிறதா கனா காணும் காலங்கள் சீரியல்???…!மிகுந்த எதிர்பார்ப்பில் ரசிகர்கள்!!!

1

விஜய் டிவியில் பல ஹிட் சீரியல்கள் உள்ளன. ஆனால் 90s கிட்ஸ்யின் மிக விருப்பமான சீரியலாக இன்று வரை இருப்பது கனா காணும் காலங்கள் சீரியல் மட்டுமே. தற்போது இந்த சீரியல் ரீயூனியன் நடந்துள்ளது. அதை உறுதிபடுத்தும் வகையில் விஜய் டிவி ஒரு புகைப்படத்தை வெளியிட்டு உள்ளது. தற்போது இந்த புகைப்படம் வைரலாகி வருகிறது.

கனா காணும் காலங்கள் சீரியல் பெயருக்கு ஏற்ற மாதிரியே கனவுகள் காணும் வயதில் நடக்கும் பல சம்பவங்களை அடிப்படையாக கொண்டது. வசதி படைத்த மாணவர்கள், ஏழை மாணவர்கள் என அனைத்து தரப்பினரும் கலந்து பயிலும் பள்ளி, அங்கு நடைபெறும் ஏமாற்றம், சோகம், காதல், சண்டை என பல உணர்வுகளை இதில் காண முடிந்தது. ஒரு பள்ளி பருவத்தில் அனைவரும் எதிர்கொள்ளும் பல பிரச்சனைகளை இதில் பார்க்க முடிந்தது.

மேலும் ஒரு மனிதனின் வாழ்க்கையில் கால்வாசி வாழ்க்கை பள்ளியிலே முடிகிறது. மேலும் ஒருவரின் வாழ்க்கையில் நண்பர்களின் அவசியத்தை மிக அழகாக இந்த சீரியல் பிரதிபலிதிருக்கும். இந்த அளவிற்கு வாழ்க்கையோடு ஒன்றிணைந்த இந்த சீரியல் அந்த காலகட்டத்தில் அவரின் விரும்பத்தக்க தொடராக இருந்தது.

இந்நிலையில் இந்த சீரியலின் ரீயூனியன் நடைபெற்று உள்ளது. மேலும் அதற்கான போட்டோவை விஜய் டிவி அதன் இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டு உள்ளது. மேலும் அதோடு சேர்த்து “coming  soon” என்ற கேப்சன் பதிவிட்டு உள்ளது. இந்த பதிவின் மூலம் அந்த சீரியல் மீண்டும் தொடங்க உள்ளது போல தெரிகிறது. எனவே இதற்காக  மிகுந்த எதிர்பார்ப்புடன் ரசிகர்கள் காத்திருக்கின்றனர். மேலும் தங்களின் எதிர்பார்ப்பை கமெண்டுகள் மூலம் தெரிவித்து வருகின்றனர்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here