இடி, மின்னல் தாக்கி 68 பேர் பலி – பிரதமர் மோடி இரங்கல் மற்றும் உதவி தொகை!!!

0
இடி, மின்னல் தாக்கி 68 பேர் பலி - பிரதமர் மோடி இரங்கல் மற்றும் உதவி தொகை!!!
இடி, மின்னல் தாக்கி 68 பேர் பலி - பிரதமர் மோடி இரங்கல் மற்றும் உதவி தொகை!!!

வடமாநிலங்களில் கடும் இடி, மின்னல் தாக்கி மற்றும் கனமழையால் நிலச்சரிவு ஏற்பட்டு 68 பேர் உயிரிழந்துள்ளனர். இறந்தவர்களுக்கு அம்மாநில முதல்வர்கள் உதவி தொகை வழங்குமாறு உத்தரவிட்டுள்ளனர். இந்நிலையில் பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். அத்துடன் அவர்களின் குடும்பத்திற்கு நிவாரண உதவி தொகையும் வழங்கியுள்ளார்.

மின்னல் தாக்கியதில் 68 பேர் பலி…

வடமாநிலங்களில் புயல் மழை என வெளுத்து வாங்கி கொண்டுள்ளது. இந்த மழையினால் கடும் மின்னல் இடி என பயங்கரமாக இருக்கிறது, இடி, மின்னல் தாக்கியதில் பலர் உயிரிழந்துள்ளனர். வடமாநிலங்களான ராஜஸ்தான், உத்திரபிரதேசம், மத்திய பிரதேசத்தில் கடும் இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது, இதனால் மக்கள் பலரும் கடும் துயரத்திற்கு ஆளாகியுள்ளனர். இந்நிலையில் மின்னல் தாக்கி இதுவரை 68 பேர் உயிரிழந்துள்ளனர். உத்திர பிரதேச மாநிலத்தில் மின்னல் தாக்கியதால் 41 பேர் இதுவரை உயிரிழந்துள்ளனர். ராஜஸ்தான் மாநிலத்தில் ஒரு சில மாவட்டத்தில் மேற்று மட்டும் மின்னல் தாக்கியதில் 20 பேர் பலியாகியுள்ளனர். அதுமட்டுமில்லாமல் ஜெய்ப்பூரில் உள்ள அமீர் அரண்மனை அருகே செலஃபீ எடுத்துக்கொண்டிருந்த 11 பேர் மின்னல் தாக்கி பலியாகினர் மற்றும் மத்திய பிரதேச மாநிலத்தில் இதுவரை 7 பேர் மின்னல் தாக்கி உயிரிழந்துள்ளனர்.

மின்னல் தாக்கியதில் 68 பேர் பலி...
மின்னல் தாக்கியதில் 68 பேர் பலி…

ராஜஸ்தான் மாநிலத்தில் மின்னல் இடி தாக்கி உயிரிழந்தோர் குடுமபத்திற்கு அம்மாநில முதலவர் அசோக் கெலாட் ரூ.5லட்சம் உதவி தொகை வழங்க உத்தரவிட்டுள்ளார். அதுமட்டுமில்லாமல் உத்ரகாண்டில் கன மழையினால் பெரும் நிலச்சரிவு ஏற்பட்டது, இந்த நிலச்சரிவினால் வீடு இடிந்து விழுந்து 3 பேர் உயிரிழந்துள்ளனர். மின்னல் தாக்கியது மற்றும் நிலச்சரிவினால் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்தார். அந்த இரங்கலில் அத்துடன் அவர்களது குடும்பத்திற்க்கும் நாட்டின் சில பகுதிகளில் மின்னல் தாக்கியதால் ஏற்பட்ட உயிரிழப்புகளை நான் அறிந்து துயருற்றேன். பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் மாநில அரசால் வழங்கப்படும். அத்துடன் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு பிரதமரின் தேசிய நிவாரண நிதியிருந்து ரூ.2 லட்சமும், காயமடைந்தவர்களின் குடும்பத்திற்கு ரூ.50,000 ஆம் கருணைத் தொகையாக வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here