அவ்வை சண்முகி படத்தில், நடிக்க இருந்தது சிவாஜியா?அதுவும் இவருக்கு பதிலாவா? வெளியான சீக்ரெட்ஸ்!!

0
அவ்வை சண்முகி படத்தில், நடிக்க இருந்தது சிவாஜியா?அதுவும் இவருக்கு பதிலாவா? வெளியான சீக்ரெட்ஸ்!!
அவ்வை சண்முகி படத்தில், நடிக்க இருந்தது சிவாஜியா?அதுவும் இவருக்கு பதிலாவா? வெளியான சீக்ரெட்ஸ்!!

உலகநாயகன் கமல் நடிப்பில் கே.எஸ்.ரவிக்குமார், இயக்கத்தில் வெளிவந்த அவ்வை சண்முகி படத்தில் முதலில் நடிக்க இருந்தது சிவாஜி தான் என்ற ஒரு தகவல் வெளியாகியுள்ளது.

கமல் சிவாஜி கூட்டணி :

உலகநாயகன் கமலுடன் இணைந்து, தேவர் மகன் என்ற படத்தில் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் நடித்திருந்தார். வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் இந்த படம் மிகப்பெரிய அளவில் பேசப்பட்டது. இந்த படத்திற்கு பின், கமல் நடிப்பில் கே எஸ் ரவிக்குமார் இயக்கத்தில் உருவான அவ்வை சண்முகி என்ற படத்தில் நடிக்க சிவாஜி கமிட் செய்யப்பட்டிருந்தாராம்.

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

ஆனால் அந்த சமயத்தில் அவருக்கு உடல் நலக்குறைவு, ஏற்பட்டதால் அதிலிருந்து வெளியேற வேண்டிய சூழல் நிகழ்ந்துள்ளது. அதன் பிறகு சிவாஜியின் பரிந்துரையை ஏற்று, கமல் கேட்டுக் கொண்டதற்கு இணங்க சிவாஜி நடிக்க வேண்டிய இடத்தில் காதல் மன்னன் ஜெமினி கணேசனை நடிக்க வைத்துள்ளார்கள்.

எல்லாம் சூர்யாவால் வந்த வினை., பொது இடத்துல வச்சு என்ன ரவுண்டு கட்டிட்டாங்க! கதறிய கார்த்தி!!

விஸ்வநாதன் என்ற பாத்திரத்தில் நடித்து, ஜெமினிகணேசனும் இந்த படத்தில் ஸ்கோர் செய்துவிட்டார். கிட்டத்தட்ட படம் வெளியாகி பட்டி தொட்டி எங்கும் பிரபலம் அடைந்தது. ஆனால் துரதிஷ்டவசமான விஷயம் என்னவென்றால், இரண்டாம் முறையாக இணைய இருந்த கமல் சிவாஜி கூட்டணி, கடைசி வரை நடக்காமல் போனதுதான். தற்போது பல ஆண்டுகளுக்கு பின் இந்த செய்தி வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here