காதல் பட சுகுமார் நியாபகம் இருக்கா?? இந்த நிலைமைக்கு காரணமே விவேக் தானாம்!!

0
காதல் பட சுகுமார் நியாபகம் இருக்கா?? இந்த நிலைமைக்கு காரணமே விவேக் தானாம்!!
காதல் பட சுகுமார் நியாபகம் இருக்கா?? இந்த நிலைமைக்கு காரணமே விவேக் தானாம்!!

பாலாஜி சக்திவேல் இயக்கத்தில் பரத் நடிப்பில் வெளியாகி சூப்பர் டூப்பர் ஹிட் அடித்த திரைப்படம் தான் காதல். இப்படத்தின் கிளைமாக்ஸ் காட்சி பலரையும் கண்கலங்க வைத்தது என்று தான் சொல்ல வேண்டும். அதுமட்டுமின்றி கம்மி பட்ஜெட்டில் உருவாகி மிகப்பெரிய வெற்றியை குவித்த படங்களில் இதுவும் ஒன்று என்று சொன்னால் மிகையாகாது. இந்த படத்தில் காமெடி நடிகராக நடித்து மக்கள் மத்தியில் பிரபலமானவர் தான் சுகுமார்.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

இதனை தொடர்ந்து விருமாண்டி, வசூல் ராஜா MBBS உள்ளிட்ட ஒரு சில படங்களில் காமெடி நடிகராக நடித்துள்ளார். ஆனால் காமெடி நடிகராக தான் நினைத்த இடத்தை அவரால் பிடிக்க முடியவில்லை. அதனால் இயக்குனர் அவதாரம் எடுத்த இவர் சும்மாவே ஆடுவோம், திருட்டு விசிடி போன்ற இரண்டு படங்களை இயக்கியுள்ளார். ஆனால் அந்த படங்களும் அவருக்கு தோல்வியை தான் கொடுத்தது. இந்நிலையில் சமீபத்தில் நடந்த பேட்டி ஒன்றில் சினிமாவில் நடந்த சில விஷயங்கள் குறித்து மனம் திறந்து பேசியுள்ளார்.

அதாவது, எனக்கு ஜிம்னாஸ்டிக், மிமிக்ரி செய்து கொண்டிருந்த போது, இது செய்தால் முன்னுக்கு வர முடியாது என்று கமல் கூறினார். அதனால் அதை செய்வதை விட்டுவிட்டேன். மேலும் நான் சினிமாவுக்குள் வந்த போது வடிவேலு டீம், ஒரு பக்கம் விவேக் டீம் என இரண்டு டீம் பிரிந்து இருந்தனர்.

அரசு அகவிலைப்படி உயர்வை குறித்து வெளிவந்த முக்கிய அறிவிப்பு.., கேட்டா ஷாக் ஆகிடுவீங்க!!

என்னால் இந்த பக்கமும் போக முடியாது, அந்த பக்கமும் போக முடியாது, சொல்லப்போனால் இங்கிலீஸ்காரன், சச்சின், ஆறு போன்ற படங்களில் கமிட்டாகி படப்பிடிப்புக்கு போய்விட்டு திரும்பி வந்து இருக்கிறேன். என்னை அவங்க ரெண்டு பேரும் வாழவே விடல, அப்போது தான் நான் புரிந்து கொண்டேன் நடிகர்களும் சில நேரங்களில் அரசியல்வாதி போல நடந்து கொள்வார்கள் என்று காதல் சுகுமார் மனம் திறந்து பேசியுள்ளார்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here