விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சரவணன் மீனாட்சி சீரியலில் நடித்ததன் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர் தான் நடிகை ரக்ஷிதா. இவர் இதற்கு முன்னர் சில தொடரில் நடித்திருந்தாலும், அவருக்கு ஒரு திருப்பத்தை ஏற்படுத்திய சீரியல் என்றால் அது சரவணன் மீனாட்சி தான். சின்னத்திரை மட்டுமன்றி வெள்ளித்திரையில் உப்பு கருவாடு படத்திலும் ஹீரோயினாக நடித்துள்ளார்.
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
அதன் பிறகு சீரியல் மற்றும் படங்களில் கமிட்டாகாமல் இருந்து வந்த அவருக்கு பிக் பாஸில் கலந்து கொள்ள வாய்ப்பு கிடைத்தது. அந்த நிகழ்ச்சியில் இறுதி வரை சென்று கடைசியில் எலிமினேட் ஆனார். இந்நிலையில் அமீர்- பாவனி கூட்டணியில் உருவாகும் படத்தின் பிரஸ் மீட்டிங் போது பல உண்மைகளை உடைத்து சொல்லி இருக்கிறார்.
அந்த பிரஸ் மீட்டிங்கில் அவர் கலந்து கொண்ட போது, பிக்பாஸ் பிறகு உங்களுக்கு சீரியல் வாய்ப்பு பறி போனதா என்று கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர், தற்போதைய இயக்குனர்கள் தயாரிப்பாளர்கள் திறமையான நடிகைகளுக்கு வாய்ப்பு கொடுக்க வேண்டும். பிக்பாஸ் ஒரு கேம் ஷோ தான், அதை வைத்து எனக்கு சினிமா வாய்ப்பு கிடக்க நான் விரும்பவில்லை, அதற்காகவும் நான் பிக்பாஸில் கலந்து கொள்ளவில்லை.
காதல் பட சுகுமார் நியாபகம் இருக்கா?? இந்த நிலைமைக்கு காரணமே விவேக் தானாம்!!
மேலும் நான் அதற்கு முன்னர் பல சீரியல்களில் நடித்திருக்கிறேன். அதை வைத்து வாய்ப்பு கிடைத்தால் போதும் என்று கூறியுள்ளார். இவர் கூறியதை வைத்து பார்க்கும் பொழுது அவருக்கு பிக்பாஸ்க்கு பிறகு எந்த வாய்ப்பும் கிடைக்கவில்லை என்று அப்பட்டமாக தெரிகிறது. இவர் பேசியதை கேட்ட ரசிகர்கள் அரசனை நம்பி புருஷனை கைவிட்ட கதையாகி போச்சே என்று கூறி வருகின்றனர்.