தமிழகத்தில் 5000 பேருக்கு வேலை ரெடி.., 16.5 கோடி நிதி ஒதுக்கீடு.., வெளியான அதிரடி அறிவிப்பு!!!

0
தமிழகத்தில் 5000 பேருக்கு வேலை ரெடி.., 16.5 கோடி நிதி ஒதுக்கீடு.., வெளியான அதிரடி அறிவிப்பு!!!
தமிழகம் மட்டுமல்லாமல் மற்ற பிற மாநிலங்களிலும் படித்த இளைஞர்கள் பெரும்பாலும் ஐடி துறையில் பணிபுரிய தான் மிகுந்த ஆர்வம் காட்டுகின்றனர். அதற்கு ஏற்றார் போல் சென்னையில் டைட்டில் பார்க் வந்ததிலிருந்து ஐடி தொழில்நுட்பம் அபரிவிதமான வளர்ச்சியை சந்தித்து வருகிறது. மேலும் படித்த பட்டதாரிகள் பலரும் இந்த நிறுவனத்தில் பணிபுரிந்து வருகின்றனர். தற்போது டைட்டில் பார்க் நிறுவனத்தைத் தொடர்ந்து சென்னையில் இன்னும் 3 ஐடி நிறுவனங்கள் அமைக்க திட்டமிட்டுள்ளனர்.
அதன்படி சென்னை மணிவாக்கத்தில் ஒரு ஐடி நிறுவனமும், மலையம்பாக்கம் பகுதியில் 5.33 ஏக்கர் நிலப் பரப்பளவில் மற்றொரு ஐடி நிறுவனமும் அமைய உள்ளது. இது தவிர வண்டலூரில் 0.5 ஏக்கர் பரப்பளவில் ஐடி நிறுவனம் அமைக்க திட்டமிட்டுள்ளனர். இதற்காக சுமார் 16.4 கோடி  நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளதாகவும் கூறப்படுகிறது. சென்னையில் புதிதாக தொடங்க உள்ள இந்த மூன்று ஐடி நிறுவனங்களின் மூலம் 5,000 மேற்பட்டோருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும் என கூறப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here