என்னை வைத்து படம் பண்ணாதிங்கனு சொன்னேன்.. குட் நைட் பட புகழ் மணிகண்டன் ஓபன் டாக்!!!

0

தமிழ் சினிமாவில் சிறு சிறு வேடங்களில் நடித்து தற்போது வளர்ந்து வரும் நடிகராக உருவெடுத்திருப்பவர் தான் நடிகர் மணிகண்டன்.  இவர் நடிப்பில் கடைசியாக வெளியான குட் நைட் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றதோடு, வசூலிலும் சாதனை படைத்தது.  இப்படி இருக்கையில் தற்போது இவர் பிரபுராம் வியாஸ் இயக்கத்தில் நடிகை கௌரி ப்ரியா ரெட்டியுடன் இணைந்து ‘LOVER’ என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார்.

இந்நிலையில் இப்படத்தின் இசை வெளியீடு விழாவில் நடிகர் மணிகண்டன் பேசியுள்ளது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. அதில், கடந்த 2019 ஆம் ஆண்டு இப்படத்தின் இயக்குனர் என்னிடம் கதையை சொல்லும்போது, என்னை வைத்து படம் பண்ணாதீங்கன்னு, தெரிவித்ததாக குறிப்பிட்டுள்ளார். ஏனென்றால் அப்பொழுது நான் சிறு சிறு வேடங்களில் நடித்து வந்தேன், இந்தப் படம் கண்டிப்பாக உருவாக வேண்டும் என நினைத்தேன். இந்த திரைப்படத்தை எடுத்ததற்காக இயக்குனர் மற்றும் தயாரிப்பாளருக்கு நன்றி என்று கூறி தனது கருத்தை முடித்துள்ளார்.

Enewz Tamil WhatsApp Channel 

தமிழகத்தில் 5000 பேருக்கு வேலை ரெடி.., 16.5 கோடி நிதி ஒதுக்கீடு.., வெளியான அதிரடி அறிவிப்பு!!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here