உங்களுக்கு கொரோனா இருக்கா? இல்லையா? தெரிந்து கொள்ள – ‘ஜியோ, ஏர்டெல் நிறுவனங்கள் புதிய வசதி’ அறிமுகம்..!

1

ஒருவருக்கு கொரோனா பாதிப்பு இருக்கிறதா என்பதை தெரிந்து கொள்ள ஜியோ மற்றும் ஏர்டெல் நிறுவனங்கள் புதிய வசதியை தங்களது செயலிகளில் அறிமுகம் செய்துள்ளன.

கொரோனா அச்சத்தை போக்க..!

இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் தொற்றால் 21 நாட்களுக்கு ஊடரங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. இந்நிலையில் நாட்டில் நிலவும் கொரோனா வைரஸ் அச்சத்தை போக்கும் நோக்கில் ஜியோ மற்றும் ஏர்டெல் நிறுவனங்கள் சார்பில் புதிய சேவை அறிவிக்கப்பட்டுள்ளது. புதிய சேவையில் ஆரோக்கியம், பயண வரலாறு உள்ளிட்ட விபரங்கள் மூலம் கொரோனா வைரஸ் பாதிப்பை சரி செய்து கொள்ள முடியுமா, முடியாதா என்பதை தாங்களாகவே கண்டறிந்து கொள்ள முடியும்.

மை ஜியோ (My Jio):

ரிலையன்ஸ் நிறுவனத்தின் ஜியோ டூல் அதன் மை ஜியோ செயலியில் உள்ளது. பயனரின் வயது, கொரோனா நோய் தொற்று ஏற்பட்டுள்ளவருடன் தொடர்பு கொண்டிருந்தீர்களா? ஆரோக்கியம் மற்றும் பயனர் மேற்கொண்ட பயண விவரங்களை இதில் பதிவிடலாம்.

தேசிய மற்றும் மாநில அளவில் பயனர் தொடர்பு கொள்ள வேண்டிய அவசர உதவி எண்கள் மற்றும் பயனர் வழங்கும் விவரங்களின் அடிப்படையில், ஜியோ பயனருக்கு கொரோனா வைரஸ் நோய் தொற்று ஏற்படும் வாய்ப்பு குறைவு, சராசரி மற்றும் அதிகம் என மூன்று நிலைகளில் தெரிவிக்கும். மூன்று நிலைகளில் பயனர் பின்பற்ற வேண்டிய வழிமுறைகளை ஜியோ வழங்கிகிறது.

ஏர்டெல் டூல் (Airtel Tool):

அப்பல்லோ மருத்துவமனையுடன் இணைந்து இந்த டூல் உருவாக்கப்பட்டு உள்ளது. இதிலும் ஜியோ டூல் போன்றே கேள்விகள் இடம் பெற்று இருக்கும். ஏர்டெல் சேவையில் ரிஸ்க் மீட்டர் அடிப்படையில் பட்டியலிடப்பட்டுள்ளது.

ஜியோ மற்றும் ஏர்டெல் நிறுவனங்கள் வழங்கும் சேவைகள் நொய் தொற்று பற்றிய அடிப்படை விவரங்களை மட்டுமே வழங்குகிறது. இதை வைத்து ஒருவருக்கு நோய் தொற்று ஏற்பட்டுள்ளதாக கருதும் போது, உடனடியாக அருகாமையில் உள்ள மருத்துவமனைக்கு செல்ல வேண்டும்.

To Subscribe Youtube Channel Click Here
To Join WhatsApp Group Click Here
To Join Telegram ChannelClick Here

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here