2020 ‘மாருதி சுசுகி செலிரியோ எக்ஸ் பிஎஸ்6’ நான்கு வேரியண்ட்டுகளில் அறிமுகம்..!

0

விஎக்ஸ்ஐ, விஎக்ஸ்ஐ (ஒ), இசட்எக்ஸ்ஐ மற்றும் இசட்எக்ஸ்ஐ (ஒ) என்ற பிஎஸ்6 செலிரியோ ஹேட்ச்பேக் மாடலின் எக்ஸ் வேரியண்ட்டை சந்தையில் அறிமுகப்படுத்தியுள்ளது. தற்போது இந்திய மார்க்கட்டில் இருக்கும் டாடா டியாகோ என்ஆர்ஜி போன்ற கார்களுக்கு 2020 மாருதி சுசுகி செலிரியோ கார் போட்டியாக இருக்கும் என கருதப்படுகிறது.

காரின் சிறப்பம்சங்கள்..!

2020 செலிரியோ எக்ஸ் மாடலில் மாருதி நிறுவனம் 1.0 லிட்டர் கே-சீரிஸ் என்ஜினை பொருத்தியுள்ளது. இந்த என்ஜின் அதிகப்பட்சமாக 68 பிஎச்பி பவருடன் 90 என்எம் டார்க் திறனை காருக்கு வழங்கும்.

இந்த என்ஜினுடன் 5-ஸ்பீடு கியர்பாக்ஸ் மற்றும் ஏஎம்டி ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் என்ற இரு ட்ரான்ஸ்மிஷன் தேர்வுகள் வழங்கப்படுகின்றன. இந்த பிஎஸ்6 கார் தனது முந்தைய வெர்சனில் இருந்து தான் அனைத்து தொழிற்நுட்பங்களையும் பெற்றுள்ளது.

இந்த வகையில் இந்த புதிய காரில் வழங்கப்பட்டுள்ள தொழிற்நுட்பங்களாக சில கண்ட்ரோல்களை கொண்ட ஸ்டேரிங் சக்கரம், ஓட்டுனருக்கு தேவையான தகவல்களை வழங்கக்கூடிய திரையுடன் உள்ள இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர், இரட்டை காற்றுப்பைகள், சீட் பெல்ட்களை விபத்தில் நேரங்களில் வலுவாக லாக் செய்யும் வசதி, இபிடியுடன் உள்ள ஏபிஎஸ் ப்ரேக்கிங் சிஸ்டம், அதிவேகத்தை எச்சரிக்கும் வசதி மற்றும் பாதசாரிகளின் மீது மோதாமல் தடுக்கும் தொழிற்நுட்பம் உள்ளிட்டவை உள்ளன.

விலை..!

இந்த புதிய காரின் டாப் வேரியண்ட் ரூ.5.67 லட்சத்தில் சந்தையில் விற்பனை செய்யப்படவுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here