மீண்டும் நயனுடன் ஜோடி போடும் ஜெயம் ரவி….,ஆகஸ்ட் 25 முதல் ‘இறைவன்’…,

0
மீண்டும் நயனுடன் ஜோடி போடும் ஜெயம் ரவி....,ஆகஸ்ட் 25 முதல் 'இறைவன்'...,
மீண்டும் நயனுடன் ஜோடி போடும் ஜெயம் ரவி....,ஆகஸ்ட் 25 முதல் 'இறைவன்'...,

‘பொன்னியின் செல்வன்’ திரைப்படத்தை அடுத்து நடிகர் ஜெயம் ரவி நடிப்பில் வெளியாக இருக்கும் திரைப்படம் ‘இறைவன்’. இந்த திரைப்படத்தில் நடிகை நயன்தாரா ஜெயம் ரவிக்கு ஜோடியாக நடிக்கிறார். தமிழ், தெலுங்கு உள்ளிட்ட 4 மொழிகளில் தயாராகியுள்ள இந்த திரைப்படத்தை அகமது என்பவர் இயக்குகிறார்.

யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். கடந்த ஆண்டு முதல் நடைபெற்று வரும் ‘இறைவன்’ படத்திற்கான படப்பிடிப்பு சமீபத்தில் முடிவு பெற்றது. தொடர்ந்து ‘இறைவன்’ படத்திற்கான போஸ்டர் ஜனவரி மாதம் வெளியாகி நல்ல வரவேற்புகளை பெற்றிருந்தது.

‘எனக்கு வேற வழி தெரியல சார்’….,திக்கு முக்காடும் ஹரிஷ் கல்யாண் – ‘LGM’ டீசர் ரிலீஸ்!

குறிப்பாக, ‘தனி ஒருவன்’ திரைப்படத்திற்கு பிறகு நயன்தாரா மற்றும் ஜெயம் ரவி இருவரும் ஜோடி சேரும் இந்த படத்தின் மீது எதிர்பார்ப்புகள் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில், ‘இறைவன்’ திரைப்படம் வரும் ஆகஸ்ட் 25 ஆம் தேதி அன்று திரையரங்குகளில் வெளியாகும் என அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வெளியாகியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here