இதற்கு தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா…..,’பையா’ 2 ஆம் பாகத்தில் கார்த்தி?

0
இதற்கு தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா.....,'பையா' 2 ஆம் பாகத்தில் கார்த்தி?
இதற்கு தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா.....,'பையா' 2 ஆம் பாகத்தில் கார்த்தி?

இயக்குனர் லிங்குசாமி இயக்கத்தில் கடந்த 2010 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் ‘பையா’. இந்த திரைப்படத்தில் நடிகர் கார்த்தி, தமன்னா, ஜெகன் உட்பட பலர் நடித்திருந்தனர். ஒரு கார் பயணத்தின் போது நடக்கும் காதல், அதை அந்த பெண்ணிடம் சொல்லமுடியாமல் ஹீரோ தவிப்பது, அவளுக்காக வில்லன்களுடன் சண்டையிடுவது என படம் முழுக்க இளம் ரசிகர்களுக்கு திரை விருந்தாக அமைந்திருந்தது இந்த படம்.

குறிப்பாக, யுவன் சங்கர் ராஜா இசையமைப்பில் வெளியான இந்த படத்தின் அனைத்துப் பாடல்களும் மீண்டும் மீண்டும் கேட்கக் கூடிய வகையில் அமைந்திருந்தது. இப்படி ரசிகர்களின் ஏக போக ஆதரவைப் பெற்ற ‘பையா’ திரைப்படத்தின் 2 ஆம் பாகத்தை இயக்கப்போவதாக இயக்குனர் லிங்குசாமி அறிவித்திருந்தார். இந்த படத்தில், நடிகர் ஆர்யா மற்றும் அவருக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை ஜான்வி கபூர் நடிக்கப்போவதாகவும் சில தகவல்கள் வெளியானது.

மீண்டும் நயனுடன் ஜோடி போடும் ஜெயம் ரவி….,ஆகஸ்ட் 25 முதல் ‘இறைவன்’…,

ஆனால், இந்த தகவலை நடிகை ஜான்வி கபூரின் தந்தை போனி கபூர் மறுத்துள்ளார். இந்த நிலையில், ‘பையா 2’ திரைப்படத்தில் நடிகர் கார்த்தியை மீண்டும் நடிக்க வைக்க பேச்சு வார்த்தை நடைபெற்று வருவதாக கிசுகிசுக்கள் அடிபட்டு வருகிறது. நடிகர் கார்த்தி தற்போது ராஜு முருகன் இயக்கத்தில் உருவாகும் ‘ஜப்பான்’ திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படம் இந்த ஆண்டு செப்டம்பர் மாதம் திரையரங்குகளுக்கு வர இருக்கிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here