‘எனக்கு வேற வழி தெரியல சார்’….,திக்கு முக்காடும் ஹரிஷ் கல்யாண் – ‘LGM’ டீசர் ரிலீஸ்!

0
'எனக்கு வேற வழி தெரியல சார்'....,திக்கு முக்காடும் ஹரிஷ் கல்யாண் - 'LGM' டீசர் ரிலீஸ்!
'எனக்கு வேற வழி தெரியல சார்'....,திக்கு முக்காடும் ஹரிஷ் கல்யாண் - 'LGM' டீசர் ரிலீஸ்!

அறிமுக இயக்குனர் ரமேஷ் தமிழ்மணி இயக்கத்தில் நடிகர் ஹரிஷ் கல்யாண் நடிப்பில் தயாராகி இருக்கும் திரைப்படம் ‘LGM’ (Lets Get Married). இந்த படத்தில் நடிகை நதியா, இவானா, VTV கணேஷ், RJ விஜய், யோகி பாபு ஆகியோர் நடித்துள்ளனர். தல தோனியின் படத்தயாரிப்பு நிறுவனமான தோனி என்டெர்டைன்மென்ட் இந்த படத்தை தயாரிக்கிறது.

இது குறித்த அறிவிப்புகள் வெளியாகி படப்பிடிப்பு முடிவுபெற்ற நிலையில், ‘LGM’ படத்திற்கான டீசர் இன்று வெளியிடப்பட்டுள்ளது. அந்த டீசரில், ஹரிஷ் கல்யாண் மற்றும் இவானா இருவரும் தங்களது திருமணத்திற்காக பல தில்லு முல்லு வேலைகளில் ஈடுபடுகின்றனர்.

உங்களுக்கு முத்தம் கொடுக்க வேற இடமே கிடைக்கலையா? சர்ச்சையில் சிக்கிய பிரபல இயக்குனர்!!

இதனால் சிக்கல்களை சந்திக்கும் ஹரிஷ் கல்யாண் எப்படி தனது முயற்சியில் வெற்றி பெறப்போகிறார் என்பது இந்த கதைக்கான சாராம்சமாக அமைந்திருக்கிறது. அந்த வகையில், தமிழ் சினிமாவில் மீண்டும் ஒரு நகரத்து காதல், கலாட்டா, கல்யாணம் கதைக்களத்துடன் வெளியாகி இருக்கும் ‘LGM’ படத்தின் டீசர் இளம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here