முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 4 ஆம் ஆண்டு நினைவு நாள் – முதல்வர் உட்பட பலரும் அஞ்சலி!!

0

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 4 ஆம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு இன்று காலை தமிழக முதல்வர், துணை முதல்வர் மற்றும் அமைச்சர்கள் அனைவரும் அவரது நினைவிடத்திற்கு சென்று அஞ்சலி செய்து உறுதிமொழி ஏற்றனர்.

“இரும்பு பெண்மணி ஜெயலலிதா”

தமிழகத்தில் பல திறமையுள்ள அதே சமயம் தன்னலமில்லா தலைவர்கள் ஆட்சி நடத்தியுள்ளனர். அந்த வகையில் 20 வருடங்களுக்கும் மேலாக ஒரு பெண்மணியாக தமிழக அரியணையை 6 முறை அலங்கரித்தவர், முன்னால் முதல்வர் ஜெ.ஜெயலலிதா. முதல் பெண் எதிர்க்கட்சி தலைவர், முதல் பெண் முதலமைச்சர், முதல் பெண் நாடாளுமன்ற உறுப்பினர் என்று தமிழக பெண்களுக்கு ஒரு முன்னுதாரணமாக வாழ்ந்து காட்டியவர். ஆண்கள் மட்டுமே அரசியலில் நிலையாக சாதிக்க முடியும் என்ற கோட்பாட்டை முறியடித்து சாதனை செய்தவர் ஜெயலலிதா.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

கடந்த 2016 ஆம் ஆண்டு உடல் நலக்குறைவு காரணமாக சென்னையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை மேற்கொண்டார். ஆனால், சிகிச்சை பலனின்றி டிசம்பர் 5 ஆம் தேதி 2016 ஆம் ஆண்டு தனது 68வது வயதில் மரணம் அடைந்தார். அவரது 4 ஆம் ஆண்டு நினைவு தினம் இன்று. இதனை அடுத்து இன்று காலை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் உட்பட அனைத்து அமைச்சர்களும் அவரது நினைவு இடத்திற்கு சென்று அஞ்சலி செலுத்தினர்.

டிச.,8 ஆம் தேதி “பாரத் பந்த்”

கூடுதலாக, அதிமுக கட்சியை இந்த அளவிற்கு உருவாக்கி அதனை தமிழகத்தில் தழைத்தோங்க செய்த ஜெயலலிதாவிற்கு கட்சியினை காப்போம் என்று கட்சி சார்பில் அனைவரும் உறுதி மொழியினையும் ஏற்றுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here