ஐபிஎல், WTC-யை தொடர்ந்து 50 ஓவர் உலக கோப்பையையும் இழக்கும் பும்ரா?? பிசிசிஐ எடுக்க போகும் முடிவு என்ன??

0
ஐபிஎல், WTC-யை தொடர்ந்து 50 ஓவர் உலக கோப்பையையும் இழக்கும் பும்ரா?? பிசிசிஐ எடுக்க போகும் முடிவு என்ன??
ஐபிஎல், WTC-யை தொடர்ந்து 50 ஓவர் உலக கோப்பையையும் இழக்கும் பும்ரா?? பிசிசிஐ எடுக்க போகும் முடிவு என்ன??

இந்திய அணியின் முன்னணி வீரரான பும்ரா, ஏற்கனவே ஐபிஎல் மற்றும் WTC தொடர்களை இழந்த நிலையில், எதிர்வரும் 50 ஓவர் உலகக் கோப்பையையும் இழக்க அதிக வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

பும்ரா

இந்திய அணியின் நட்சத்திர வீரரான பும்ரா முதுகு வலியால் அவதிப்பட்டு வருகிறார். இதனால் இவர், கடந்த ஆண்டு நடைபெற்ற ஆசிய கோப்பை மற்றும் டி20 உலக கோப்பை உள்ளிட்ட போட்டிகளை தவற விட்டார். டி20 உலகக் கோப்பைக்கு பிறகு, இவர் உடல்நிலையில் சற்று முன்னேற்றம் அடைந்த நிலையில், மீண்டும் அணிக்கு திரும்புவார் என எதிர்பார்க்கப்பட்டது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

ஆனால், இவர் நீண்ட நேரம் பந்து வீசினால் முதுகு வலி ஏற்படுவதை உணர்ந்துள்ளார். இதனால் பிசிசிஐ, பார்டர் கவாஸ்கர் டிராபிக்காக இவரை அவசரப்படுத்த கூடாது என எண்ணி, தேசிய அகாடமியில் (NCA) ஓய்வு எடுத்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தியது. இதனை தொடர்ந்து, எதிர்வரும் வரும் ஐபிஎல் மற்றும் WTC தொடரிலும் இவர் விளையாட மாட்டார் என தகவல் வெளியானது.

சாதனைப் பட்டியலில் விராட் கோலியுடன் இணைந்த இந்தியாவின் வேகப்பந்து வீச்சாளர்!!

இந்நிலையில், பும்ராவின் உடல் நிலையை பரிசோதித்த NCA மருத்துவ குழு, இவருக்கு அறுவை சிகிச்சை மேற்கொண்டால், சிறந்த பலன் அளிக்கும் என கூறியுள்ளதாக தகவல் வெளியாகியது. இது குறித்த, அடுத்த கட்ட நடவடிக்கையை பிசிசியானது விரைவில் அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஒருவேளை, பும்ரா அறுவை சிகிச்சை செய்து கொண்டால், குறைந்தபட்சம் 6 மாதம் ஓய்வில் இருக்க வேண்டிய நிலை ஏற்படும். இதனால், அக்டோபர் மாதம் நடைபெற உள்ள 50 ஓவர் உலக கோப்பையை இழக்கவும் வாய்ப்புள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here