நிலவுக்கு செல்ல காதலி தேவை – ஜப்பான் கோடீஸ்வரரின் சுயம் வரம்

0
Yusaku Maezawa Dear Moon Project

ஜப்பானைச் சேர்ந்த பிரபல தொழிலதிபர் யூசகு மேசவா. இவர் தனது வித்தியாசமான அணுகுமுறைகளும், பணம் இல்லாத உலகம் எப்படி இருக்கும் போன்ற சோதனைகளுக்கும் உலகம் முழுவதும் மிகவும் பிரபலமானவர்.

ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் நிலவுக்கு மனிதனை அனுப்பும் திட்டத்தில் சேர்ந்து நிலவுக்கு செல்லவுள்ளனர். இந்நிலையில் தனது பழைய காதலியை பிரிந்து வாழ்ந்துவரும் இவர் தற்போது நிலவுக்கு செல்ல காதலி தேவை என அறிவித்துள்ளார். 44 வயதான அவர் தனிமை மற்றும் வெறுமையின் உணர்வுகள் தன்னை பாதிப்பதாகவும் மற்றும் தான் காதலிக்க ஒரு பெண் தேவை எனவும் தெரிவித்துள்ளார்.

மேலும் அதற்கு பல நிபந்தனைகளையும் அவர் கூறியுள்ளார். நிலவுக்கு பயணம் செய்யும் முதல் பெண்ணாக நீங்கள் ஏன் இருக்கக்கூடாது? 20 அல்லது அதற்கு மேற்பட்ட வயதுடைய பெண்கள், ஜனவரி 17ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பித்தவர்களில் ஒருவரை மார்ச் இறுதிக்குள் தேர்வு செய்வேன் என்றும் கூறியுள்ளார்.

ட்வீட்டை ரீட்வீட் செய்தவர்களுக்கு அடித்தது ஜாக்பாட் – ரூ. 65.5 கோடி பரிசு

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here