கொரோனா பரவல் எதிரொலி – ஒலிம்பிக் போட்டிக்கு ரசிகர்கள் நோ என்ட்ரி!!

0

ஜப்பானில் வருகிற ஜூலை மாதம் ஒலிம்பிக் போட்டி நடைபெறவுள்ளது. தற்போது கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ரசிகர்கள் நேரில் போட்டியை காண தடை விதிக்கப்பட்டுள்ளது.

ஒலிம்பிக்:

கொரோனா வைரஸ் காரணமாக கடந்த ஆண்டு விளையாட்டு துறை முழுவதுமாக முடங்கியது. பின்பு கடந்த ஆண்டு இறுதியில் இருந்து தான் விளையாட்டு துறைகள் வழக்கம் போல் செயல்பட்டு வந்தது. இருந்தும் போட்டிகள் நடக்கும் மைதானத்திற்கு ரசிகர்கள் அனுமதிக்கு தடை விதித்து வந்தனர்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

கொரோனா பரவல் சில தினங்களுக்கு முன்பு குறைந்து வந்த நிலையில் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கான டெஸ்ட் போட்டியில் மைதானத்திற்கு ரசிகர்கள் அனுமதிக்கப்பட்டனர். பின்பு கொரோனாவின் தாக்கம் மீண்டும் அதிகரிக்க துவங்கியது. இதன் காரணமாக ரசிகர்கள் அனுமதிக்கு மீண்டும் தடை விதிக்கப்பட்டது. இந்நிலையில் வருகிற ஜூலை மாதம் 23ம் தேதி ஒலிம்பிக் போட்டி நடைபெறவுள்ளது.

பி.டி.உஷாவின் சாதனையை முறியடித்த தமிழக பெண்மணி – தலைவர்கள் வாழ்த்து!!

இந்த போட்டிகளில் ரசிகர்கள் அனுமதிக்கப்படுவார்களா என்று குழப்பம் தொடர்ந்து நீடித்து வந்தது. இந்நிலையில் உலகின் பல்வேறு நாடுகளில் தற்போது கொரோனாவின் தாக்கம் அதிகரித்து வருகிறது. தற்போது இதனை பற்றி ஆலோசித்த ஒலிம்பிக் கமிட்டி ஜப்பானில் நடைபெறவுள்ள ஒலிம்பிக் போட்டியில் ரசிகர்கள் அனுமதிக்கு தடை என்று அதிரடியாக அறிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here