ஸ்டாலினின் முதல் கமல் வரை ஒரே ஸ்ட்ரேட்டஜியா?? இத்தனை நாள் எங்க இருந்தீங்க?? கலாய்க்கும் நெட்டிசன்கள்!!

0

தமிழகத்தில் தற்போது தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது என்று தான் கூற வேண்டும். அந்த அளவிற்கு அந்த தலைவர்களும் இப்பொது மட்டும் இறங்கி வேலை பார்த்து வருகின்றனர். தேர்தல் நெருங்கும் சமயத்தில் அனைத்து கட்சி தலைவர்களும் சாமானியனாக தன்னை காட்டி கொள்வது பழங்காலம் முதல் இயல்பு தானே.

சட்டமன்ற தேர்தல்

தமிழகத்தில் வரும் ஏப்ரல் மாதம் அனைவரும் எதிர்பார்த்திருந்த சட்டமன்ற தேர்தல் நடைபெற இருக்கின்றது. இந்த தேர்தலை அனைத்து தலைவர்களும் எதிர்பார்ப்பதற்கான காரணம், இந்த தேர்தலில் வெற்றி அடைந்தால் தான் தமிழகத்தின் சிம்மாசனத்தை அடுத்த 5 ஆண்டுகளுக்கு அலங்கரிக்க முடியும். இதற்காகவே அனைத்து கட்சி தலைவர்களும் களத்தில் இறங்கி வேலை பார்த்து வருகின்றனர்.

படப்பிடிப்பை மோதலில் ஆரம்பித்த விக்ரம், துருவ் – அதிர்ச்சியில் ரசிகர்கள்!!

குறிப்பாக, வேட்பு மனு தாக்கல் செய்வது, வேட்பாளர்களை அறிமுகப்படுத்துவது, பிரச்சாரத்தில் ஈடுபடுத்துவது போன்ற பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். திமுக கட்சி தலைவர் ஸ்டாலின் கடந்த இரு மாதங்களாக மக்கள் மத்தியில் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். இவருக்கு உறுதுணையாக அவரது மகன் உதயநிதி ஸ்டாலினும் பிரச்சாரம் செய்து வருகின்றனர்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

இது ஒரு பக்கம் இருக்க, இவருக்கு போட்டியாக நடிகர் கமல் ஹாசன் கோவையில் அனைத்து இடங்களுக்கும் சென்று ஆய்வு செய்து வருகிறார். அதே போல் “காபி வித் கமல்’ என்ற ஒரு நிகழ்வினையும் ஆரம்பித்துள்ளார். இவரை போலவே நடிகை குஷ்பூவும் மக்களுடன் இணைந்து டீ குடித்துள்ளார். இதனை பார்த்த மக்கள் 5 வருடங்களை இல்லாத அக்கறை இப்பொது மட்டும் இப்பொது மட்டும் எப்படி திடிரென்று வருகிறது என்பது போன்ற கேள்விகளை எழுப்பி வருகின்றனர். அப்படி என்றால் தேர்தல் நெருங்கும் சமயத்தில் தான் மக்களின் நினைவு தலைவர்களுக்கு வருகிறது என்று கொந்தளித்தும் வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here