பி.டி.உஷாவின் சாதனையை முறியடித்த தமிழக பெண்மணி – தலைவர்கள் வாழ்த்து!!

0

பஞ்சாப் மாநிலம் பாட்டியாலாவில் நடைபெற்ற தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் வேகப்பெண்மணி பி.டி.உஷாவின் சாதனையை முறியடித்துள்ளார் தமிழக பெண்மணி தனலட்சுமி.

சாதனை பெண்மணி தனலட்சுமி

பஞ்சாப் மாநிலம் பாட்டியாலாவில் மாநிலங்களுக்கான தேசிய சீனியர் தடகள சாம்பியன்ஷிப் போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் அசாம் மாநிலத்திலிருந்து ஹீமா தாஸ், ஹேப்பி கோகோய், ஆந்திர மாநிலத்திலிருந்து மடாலி சுப்ரியா, தெலுங்கானாவிலிருந்து ஹர்திகா தேவி மற்றும் டெல்லியிலிருந்து சிம்ரன் தீப் கவுர், நீசு குமாரி ஆகியோர் பங்கு பெற்றனர்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

இந்த போட்டியில் தமிழகம் சார்பாக தனலட்சுமி என்பவர் கலந்து கொண்டார். இந்த போட்டியில் 200 மீட்டர் ஓட்டத்தை 23.26 வினாடிகளில் கடந்து தமிழக பெண்மணி தனலட்சுமி சாதனை படைத்துள்ளார். இதற்கு முன்னதாக இவ்வகை சாதனை புரிந்த பி.டி.உஷா மற்றும் ஹீமா தாஸ் ஆகியோரின் சாதனையை முறியடித்துள்ளார் தனலட்சுமி. தொடர்ந்து 100 மீட்டர் ஓட்டத்திலும் முதலிடம் பிடித்துள்ளார்.

குக் வித் கோமாளிக்கே போட்டியா?? சன் டிவி வெளியிட்ட மாஸ்டர் செஃப் ப்ரோமோ!!

தனலட்சுமியின் இந்த வரலாற்று சாதனைக்கு தமிழக துணை முதல்வர் பன்னீர் செல்வம் ட்விட்டரில் பாராட்டுகளை தெரிவித்துள்ளார். சாதிக்க துடிக்கும் பெண்மணிகளுக்கு ஊக்கமளிக்கும் வகையில் முன்மாதிரியாக திகழும் தனலட்சுமியின் வெற்றிப்பயணம் மென்மேலும் தொடர வேண்டும் என வாழ்த்தியுள்ளார் பன்னீர் செல்வம். தனலட்சுமியின் இந்த வெற்றிக்கு பல பிரபலங்களும், பொது மக்களும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here