இங்கிலாந்து கிரிக்கெட் வீரரான ஜேம்ஸ் ஆண்டர்சன் நியூசிலாந்திற்கு எதிரான இரண்டாவது டெஸ்டில் ஒரு சாதனை படைத்துள்ளார். இதுவரை அவர் 162 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி அதிக டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய இங்கிலாந்து வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.
இங்கிலாந்து, நியூசிலாந்து அணிகள் இடையே லார்ட்ஸில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டி டிராவில் முடிவடைந்தது. இந்நிலையில் இரண்டாவது போட்டி ஜூன் 10 அன்று தொடங்கியது. காயம் காரணமாக நியூசிலாந்து கேப்டன் கேன் வில்லியம்சன் போட்டியில் இருந்து விலகியுள்ள நிலையில், டாம் லாதம் கேப்டனாக தேர்வு செய்யப்பட்டார். டாஸ் வென்ற இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட் பேட்டிங்கை தேர்வு செய்தார். இதற்கு முன் இங்கிலாந்து டெஸ்ட் அணிக்காக 161 போட்டிகளில் விளையாடி, இங்கிலாந்தில் அதிக டெஸ்ட் போட்டிகளில் விளையாடியவர் என்ற பெருமையை பெற்றவர் அலஸ்டைர் குக்.
தற்போது வேகப்பந்து வீச்சாளர் ஜேம்ஸ் ஆண்டர்சன் இந்த சாதனையை முறியடித்து உள்ளார். அதாவது, இங்கிலாந்துக்கு அதிக டெஸ்ட் போட்டியில் விளையாடிய வீரர் பெயரை பெற்றுள்ளார். இதுவரை அவர் 162 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியும் உள்ளார். சச்சின் டெண்டுல்கர் 200 டெஸ்டிலும், ரிக்கி பாண்டிங், ஸ்டீவ் வாக் தலா 168 போட்டிகளிலும், ஜாக் காலிஸ் 165 போட்டிகளிலும், சந்தர்பால் 164 போட்டிகளிலும் விளையாடி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்