விஸ்வநாதன் ஆனந்துடன் செஸ் விளையாடும் அமீர் கான்

0

கொரோனா இரண்டாம் அலைக்கு நிதி திரட்டும் நோக்கில் செஸ் சாம்பியன் விஸ்வநாதன் ஆனந்துடன், செஸ் விளையாடவிருக்கிறார் பாலிவுட் நடிகர் அமீர் கான். இது தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகிவருகிறது.

அமீர் கான்:

பாலிவுட் திரைதுறையின் மிகவும் முக்கியமான நடிகராக இருப்பவர் தான், அமீர் கான். 56 வயதான இவர் தொடர்ந்து திரைப்படங்களில் நடித்து வருகிறார். முன்னணி நடிகரின் ஒருவரான இவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு மீண்டு வந்துள்ளார். 2019ம் ஆண்டு துவங்கிய கொரோனா தொற்று தற்போது முதல் அலை இரண்டாம் அலை என தொடர்ந்து வருகிறது. இதனை தடுக்க மத்திய மற்றும் மாநில அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் சினிமா பிரபலங்கள் தங்களால் முடிந்த உதவிகளை செய்து வருகின்றனர்.

இந்நிலையில் கொரோனா இரண்டாம் அலைக்கு நிதி திரட்டும் நோக்கில் செஸ் சாம்பியன் விஸ்வநாதன் ஆனந்துடன், செஸ் விளையாடவிருக்கிறார் பாலிவுட் நடிகர் அமீர் கான். “நீங்கள் அனைவரும் காத்திருக்கும் தருணம்! சூப்பர் ஸ்டார் அமீர்கான் ஒரு சதுரங்க விளையாட்டு காதலன். அவர் முன்னாள் உலக சாம்பியனான விஸ்வநாதன் ஆனந்துடன் ஒரு போட்டியில் விளையாடுவார்” என செஸ்.காம் ட்விட்டரில் தெரிவித்துள்ளது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here