Monday, June 21, 2021

கொரோனா எதிரொளி: 200 ஊழியர்களுக்கு டாடா காட்டிய புக் மை ஷோ!!!

Must Read

கொரோனா பரவல் காரணமாக நாடு முழுவதும் பல்வேறு தரப்பினரும் பொருளாதார மற்றும் வாழ்வாதாரத்தை இழந்து உள்ளனர். இந்நிலையில் திரைப்படத்தை முன்பதிவு செய்யும் தளமான ‘புக் மை ஷோ’ தனது 200 ஊழியர்களை பணி நீக்கம் செய்வதாக அந்த நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி ஆஷிஷ் ஹேம்ராஜனி  ட்வீட் செய்துள்ளார்.

 

மேலும் அவர் கூறியதாவது ,”COVID-19 எனக்கு பல பாடங்களைக் கற்றுக் கொடுத்தது & இன்று இன்னொன்றைக் கற்றுக்கொண்டேன்.  மிகவும் நம்பமுடியாத திறமையான மற்றும் செயல்திறன் உந்துதல் கொண்ட 200 நபர்களை நாங்கள் விட்டுச்செல்லும்போது, ஒவ்வொருவரும் தங்களுக்கு பல்வேறு  செய்திகளை  அனுப்பி வருகின்கின்றனர்”,என கூறியுள்ளார். நாடு முழுவதும் உள்ள இந்த நிறுவனத்தின் 1500 ஊழியர்களில் 31 சதவீத ஊழியர்களை பணிநீக்கம் செய்து உள்ளது.

மேலும் ,கடுமையான ஊரடங்கு மற்றும்  இரண்டாவது அலை நாட்டை கடுமையாக தாக்கியுள்ளதால், பொழுதுபோக்கு மற்றும் சுற்றுலா உள்ளிட்ட துறைகள்  கடந்த ஆண்டிலிருந்து  மிகுந்த வீழ்ச்சியடைந்து உள்ளது. மே மாதத்தில் தொற்று  உச்சத்தில் இருந்தபோது 15 மில்லியனுக்கும் அதிகமானோர் வேலை இழந்துள்ளனர், இது ஒரு வருடத்தில் மிக மோசமானது என்று பொருளாதாரம் கண்காணிப்பு மையம் நடத்திய ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.கடந்த ஆண்டு முதல் அலையின் தாக்கத்தால் இந்நிறுவனம் 270 ஊழியர்களை பணி நீக்கம் செய்தது குறிப்பிடத்தக்கது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest News

இவங்க தாங்க உண்மையான சிங்க பெண்… இந்தியாவின் 12வது பெண் போர் விமானியாக ஜம்மு & காஷ்மீரை சேர்ந்த பெண் தேர்வு!!

இந்தியாவின் ஜம்மு & காஷ்மீரை சேர்ந்த மௌவ்யா சூடான் என்பவர் 12வது பெண் போர் விமானியாக  இந்திய விமானப்படைக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார்.   ஜம்மு-காஷ்மீரின் ராஜோரி மாவட்டத்தில் உள்ள...
- Advertisement -

More Articles Like This

- Advertisement -