விவாகரத்திற்கு பிறகு இந்த காரியத்தில் அதிகம் ஈடுபடும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் – அவரே வெளியிட்ட பதிவு!!

0

விவாகரத்திற்கு பிறகு ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தனது உடலையும் மனதையும் கட்டுக்கோப்பாக வைத்துக்கொள்ள வேண்டும் என தீவிர ஒர்க்அவுட்டில் இறங்கியுள்ளார். மேலும், அந்த ஜிம்மில் வொர்க் அவுட் செய்யும் வீடியோவினையும் சமூக வலை பக்கங்களில் பதிவிட்டுள்ளார்.

ஐஸ்வர்யா ரஜினிகாந்த்:

தனுஷ் மற்றும் இயக்குனர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இருவரும் கடந்த ஜனவரி மாதத்தில் கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து பெற்றுக் கொண்டனர். விவாகரத்திற்கு பிறகு இருவருமே அவரவர் வேலைகளில் கவனம் செலுத்த ஆரம்பித்து விட்டனர். மேலும், இருவரும் சேர்ந்து விடுவார்கள் என தற்போது வரைக்கும் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கின்றனர். ஆனால், அதற்கு வாய்ப்பே கிடையாது. இருவருமே அவரவர் பட வேலைகளில் பிசியாக இருந்து வருகின்றனர்.

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

மேலும் கடந்த சில தினங்களாகவே ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தனது உடலை கட்டுக்கோப்பாக வைத்துக் கொள்வதில் அதிக கவனம் செலுத்தி வருகிறார். மேலும் அவ்வப்போது ஜிம்மில் ஒர்க்அவுட் செய்யும்படியான வீடியோக்களை சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகிறார். ரசிகர்களும் விவகாரத்திற்குப் பிறகு உடலையும் மனதையும் நன்றாக மெருகேற்றி கொண்டிருக்கிறீர்கள் என ஐஸ்வர்யா ரஜினிகாந்திற்கு ஆதரவாக கமெண்டுகளை பதிவிட்டு வருகின்றனர். தற்போது அந்த வீடியோ வைரலாகி கொண்டிருக்கிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here