சென்னையில் மீண்டும் தலைதூக்கும் கொரோனா.,, அமலுக்கு வரும் கட்டுப்பாடுகள்!!

0

சென்னையில் 2 நாட்களாக கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில் மீண்டும் கட்டுப்பாடுகளை மாநகராட்சி அமல்படுத்தியுள்ளது.

மீண்டும் கொரோனா:

தமிழகத்தில் கொரோனா பரவல் குறைந்து, மீண்டும் இயல்பு நிலைக்கு திரும்பும் இந்த நிலையில் அண்மை நாட்களாக தொற்று மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது. அதிகபட்சமாக சென்னையில் 102 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன் மூலம் தமிழகத்தில் பாதிப்பு எண்ணிக்கை 35 ,75,380 ஆக அதிகரித்துள்ளது. இதன் காரணமாக பொது சுகாதாரத்துறை செய்திக்குறிப்பை வெளியிட்டுள்ளது.

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

அதில், சென்னைக்கு உட்பட்ட பகுதிகளில் தொற்றைக் கட்டுப்படுத்த மாநகராட்சியின் சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் அமல்படுத்தப்பட்டு வருகிறது. அதாவது சென்னையில் கட்டாயம் மாஸ்க் அணிய வேண்டும் என்று சென்னை மாநகராட்சி அறிவுறுத்தியுள்ளது. மேலும் பொது இடங்களில் தனி மனித இடைவெளியை கடைப்பிடிக்கவும் மக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

சென்னையில் கொரோனா மெகா தடுப்பூசி சிறப்பு முகாம்கள் மூலம் பொதுமக்களுக்கு அதிக அளவில் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் கோவிட் தொற்று அறிகுறிகளான சளி, இருமல், காய்ச்சல் போன்றவைகள் இருந்தால் அலட்சியம் காட்டாமல் பக்கத்தில் உள்ள மையங்களுக்கு சென்று பரிசோதனை செய்து கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here