TET தேர்வுக்கு தயாராகுபவரா நீங்கள்? உங்களுக்குதான் இந்த பதிவு !!

0

தமிழகத்தில் TET தேர்வுக்கு தயாராகி வருபவர்களுக்காக , உயர் தொழில்நுட்ப வசதிகள் நிறைந்த மேம்படுத்தப்பட்ட போர்ட்டலைத் தொடங்க முடிவு செய்து உள்ளதாக தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது.

TRB பதிவு:

தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் (TN TRB) நடத்தும் தகுதி தேர்வுகள் மூலம் தமிழக அரசின் கட்டுப்பாட்டில் உள்ள அனைத்து கல்வி நிலையங்களிலும் ஏற்பட்டுள்ள Primary மற்றும் Upper Primary காலிப் பணியிடங்களுக்கு, தகுதியான ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்பட்டு வருகிறார்கள். இருப்பினும் தமிழகத்தில் கொரோனா காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக எந்த ஒரு போட்டி தேர்வுகளும் நடத்தப்படவில்லை.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

இந்நிலையில் பட்டதாரிகளுக்கு மகிழ்ச்சி அளிக்கும் விதமாக, நடப்பு ஆண்டு தொடக்கத்தில் இருந்து அனைத்து விதமான போட்டித்தேர்வு அறிவிப்புகள் வெளியாகி வருகிறது.மேலும் ஆசிரியர் தேர்வு வாரியம் தற்போது தேர்வர்களுக்கு மகிழ்ச்சியான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

அதாவது TET தேர்வுக்கு விண்ணப்பிப்பது முதல் தேர்வு முடிவுகள் வரை அனைத்து சேவைகளையும் தேர்வர்கள் TRB யின் இணையதளத்தில் பெறலாம். இந்நிலையில் இணையதள போர்டலை ஆசிரியர் தேர்வு வாரியம் மேற்படுத்தியுள்ளதாகவும், இனி அனைத்து சேவைகளும் ஒரே தளத்தில் கிடைக்க இவை வழிவகை செய்யும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here