மீண்டு வந்தாரா பாண்டியன் ஸ்டோர்ஸ் தீபிகா?? வெளியான புகைப்படத்தால் சந்தேகத்தை எழுப்பிய ரசிகர்கள்!!!

0

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் ஐஸ்வர்யா கதாபாத்திரத்தில் நடித்து வந்தவர் விஜே தீபிகா. இவர் ஒரு சில தனிப்பட்ட காரணங்களால் அந்த சீரியல்லில் இருந்து விலக்கப்பட்டார். இந்நிலையில் சோசியல் மீடியாவில் பிசியாக இருக்கும் இவர் அவ்வப்போது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை ஷேர் செய்து வருகிறார். அந்த வகையில் ரசிகர்களுக்கு சந்தேகத்தை எழுப்பும் விதத்தில் புகைப்படம் ஒன்றை பதிவிட்டு உள்ளார்.

டிவி தொகுப்பாளினியாக தனது கேரியரை ஆரம்பித்த விஜே தீபிகா, பல முயற்சிகளுக்கு பிறகு பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் நடிக்க சான்ஸ் கிடைத்தது. மேலும் இவர் அந்த சீரியலில் நான்கு அண்ணன் தம்பிகளில் கடைசி தம்பியான கண்ணனுக்கு ஜோடியாக ஐஸ்வர்யா என்ற கதாபாத்திரத்தில் நடித்து வந்தார்.

மேலும் முதலில் இந்த கதாபாத்திரத்தில் நடித்தவர் திடீரென விலகியதால் அவருக்கு இந்த சான்ஸ் கிடைத்தது. இனினும் நடிக்க தொடங்கிய ஆரம்பத்தில் இவருக்கும் கண்ணனுக்கும் செட் ஆகவில்லை, அக்கா தம்பி மாதிரி இருக்காங்க என்பது போன்ற பல விமர்சனங்கள் எழுந்தது. நாட்கள் செல்ல செல்ல இவை அனைத்தும் மாறி இருவரையும் ஏற்று கொண்டனர்.

இந்நிலையில் இவர் தன்னுடைய முகத்தில் ஏற்பட்ட முகப்பருக்கள் காரணமாக சிகிச்சைக்காக அந்த சீரியல்லில் இருந்து விலக்கப்பட்டார். இதையடுத்து இவர் தற்போது தனது இன்ஸ்டாவில் ஒரு புகைப்படத்தை வெளியிட்டு உள்ளார். அந்த புகைப்படத்தில் முகத்தில் எந்தவித பருக்களும் இல்லாமல் அழகாக உள்ளார். அவரின் இந்த புகைப்படம் ரசிகர்களுக்கு சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here