புதுசா இது வேறயா?? ஆண்டுக்கு 3.1 மில்லி மீட்டர் உயரும் கடல் நீர் மட்டம் – ஐரோப்பிய ஆணையம் எச்சரிக்கை!!

0

உலகின் கடல்நீர் மட்டம் ஆண்டுக்கு ஆண்டு  3.1 மில்லி மீட்டர் உயர்ந்து வருவதாக ஐரோப்பிய ஆணையத்தின் கீழ் இயங்கும் கோப்பர் நிக்கஸ் மரைன் சர்வீஸ் தனது கட்டுரையில் தெரிவித்துள்ளது.

கடல் நீர் மட்டம் உயர்வு:

ஆர்டிக் பகுதிகளில் உள்ள பனிப்பாறைகள் உருகுவதால் உலகின் கடல் நீர் மட்டம் ஒவ்வொரு ஆண்டும் உயர்ந்து வருகிறது.  உலகம் வெப்பமடைவதாலும், பசுமை இல்ல வாயுக்களின் விளைவாலும் இந்த பனிக்கட்டிகள் முன்பு இருந்ததை விட வேகமாக குறைந்து வருவதாக அண்மையில் தகவல்  வந்தது.

 

இது குறித்து ஆய்வு நடத்திய ஐரோப்பிய ஆணையத்தின் கீழ் இயங்கும் கோப்பர் நிக்கஸ் மரைன் சர்வீஸ் முக்கிய தகவல் ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. அதாவது, முன்பு எப்போதும் இல்லாத அளவில் கடல் நீர் மட்டம் ஆண்டுக்கு  3.1 மில்லி மீட்டர் உயர்ந்து வருவதாகவும், 1979 முதல் 2020ம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் ஆர்க்டிக் பகுதியில் உருகிய பனிக்கட்டிகள் ஜெர்மனி நாட்டின் பரப்பை விட ஆறு மடங்கு அதிகம் எனவும் தெரிவித்துள்ளது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here