உற்சாகத்தில் நகைப்பிரியர்கள்.. சட்டென்று குறைந்த ஆபரணத் தங்கத்தின் விலை!!

0

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை 200 ரூபாய் குறைந்து, சவரன் விலை ரூ.35,104 விற்பனை செய்யப்பட்டு வருவது வாடிக்கையாளர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

விலை குறைந்த தங்கம்:

கடந்த சில தினங்களுக்கு முன்பு சுபமுகூர்த்தம் மற்றும் திருவிழாக்கள் காரணமாக ஏற்றத்தில் இருந்த தங்கத்தின் விலை தற்போது வெகுவாக குறைந்துள்ளது. முன்பு ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு 112 ரூபாய் உயர்ந்து, ரூ.34,992 -க்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது. இதுமட்டுமில்லாமல், ஒரு கிராம் தங்கத்தின் விலை 14 ரூபாய் உயர்ந்து 4,374 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது, அதன் வாடிக்கையாளர் மத்தியில் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இதனால், எப்போது இந்த தங்கத்தின் விலையில் மாற்றம் வரும் என பொதுமக்கள் பலத்த எதிர்பார்ப்பில் இருந்தனர். இந்த நிலையில், இன்றைய மதிப்பில், 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 200 ரூபாய் குறைந்து 35,104 ரூபாய்க்கு விற்பனையாகி வருகிறது. மேலும், ஒரு கிராம் தங்கத்தின் விலை 25 ரூபாய் குறைந்து ரூ.4,388 க்கு விற்பனை செய்யப்படுகிறது. இது போக, வெள்ளியின் விலை கிராமுக்கு 30 காசு குறைந்து ரூ.64.80 காசுகளுக்கு சந்தைப்படுத்தப்பட்டு வருகிறது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here