
ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து சூரியனை ஆய்வு செய்ய பி.எஸ்.எல்.வி. சி-57 ராக்கெட் மூலம் ஆதித்யா எல்-1 விண்கலம் 11.50 மணிக்கு வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது. பல்வேறு நாடுகளில் இருந்து சூரியனை ஆய்வு செய்ய விண்கலம் ஏவப்பட்டாலும் இந்தியாவின் முதல் சூரிய ஆய்வு விண்கலம் ஆதித்யா எல்-1 தான்.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
ஆதித்யா எல்-1 விண்கலம் சூரியனில் இருந்து 149 மில்லியன் கிலோ மீட்டர் தூரத்தில் நிலை நிறுத்தப்படுவதாக தெரிவித்துள்ளனர். இந்த விண்கலம் சூரியனின் கொரோனா பகுதி, சூரிய புயல், ஈர்ப்பு விசை, கதிர்வீச்சு ஆகியவற்றை ஆய்வு செய்ய உள்ளது. அதன்படி தினமும் 1,440 புகைப்படங்களை இந்த விண்கலம் பூமிக்கு எடுத்து அனுப்பும். சுமார் 1,470 கிலோ எடை கொண்ட ஆதித்யா எல்-1 விண்கலம் 125 நாட்கள் சூரியனில் பயணம் செய்து ஆய்வு செய்ய உள்ளது.
பெற்றோரின் பரம்பரை சொத்தில் இந்த குழந்தைகளுக்கும் பங்கு உண்டு., உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு!!!
இந்த விண்கலம் தற்போது விண்ணில் ஏவப்பட்ட நிலையில் முதல் 3 ஸ்டேஜ் வெற்றி அடைந்துள்ளதாக இஸ்ரோ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஏற்கனவே சந்திரயான்-3 தொடர்பான லேண்ட் ரோவர்கள் நிலவில் ஆய்வு செய்து வரும் நிலையில் தற்போது ஆதித்யா எல்-1 விண்ணில் ஏவப்பட்டுள்ளது. இதன் மூலம் பல்வேறு தகவல்கள் கிடைக்கலாம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.