இந்தியன் சூப்பர் லீக்: போராடி போட்டியை டிரா செய்த சென்னை அணி!!

0
இந்தியன் சூப்பர் லீக்: போராடி போட்டியை டிரா செய்த சென்னை அணி!!
இந்தியன் சூப்பர் லீக்: போராடி போட்டியை டிரா செய்த சென்னை அணி!!

இந்தியன் சூப்பர் லீக் தொடரில், சென்னை மற்றும் ஹைதராபாத் அணிகளுக்கு இடையிலான போட்டி சமநிலையில் முடிந்தது.

இந்தியன் சூப்பர் லீக்:

இந்தியன் சூப்பர் லீக் தொடரின் 9 வது சீசனுக்கான போட்டி நேற்று ஹைதராபாத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில், சென்னையின் FC அணியானது ஹைதராபாத் அணிக்கு எதிராக விளையாடியது. விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த போட்டியில், ஆட்டத்தின் முதல் பாதியில் இரு அணிகளும் ஒரு கோலுக்காக கடுமையாக போராடினர்.

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

ஆனாலும், இரு அணிகளும் முதல் பாதியில் கோல் அடிக்காத நிலையில், 2வது பாதி ஆட்டம் தொடங்கப்பட்டது. இதில், சென்னை அணியின் பீட்டர் ஸ்லிஸ்கோவிக் கார்னர் கிக் மூலம் கிடைத்த பந்தை அசத்தலான கோலாக மாற்றினார். இதன் மூலம், சென்னை அணி 1-0 என்ற கோல் கணக்கில் முன்னிலை பெற்றது. இதையடுத்து, ஆட்டத்தின் 87 வது நிமிடத்தில், சென்னை அணி செய்த தவறால் ஹைதராபாத் அணிக்கு பெனால்டி வாய்ப்பு கிடைத்தது.

IND vs SL : தொடரை கைப்பற்றிய இந்தியா…, இலங்கை அணிக்கு எதிராக தொடரும் சாதனை!!

இதனை பயன்படுத்திய ஹைதராபாத் அணியின் பர்த்தலோமிவ் ஓக்பெச்சே கோல் அடித்து அசத்தினார். இதனால், போட்டியானது 1-1 என்ற கோல் கணக்கில் சமநிலையில் முடிந்தது. இந்த போட்டியின் முடிவில், 11 அணிகள் கொண்ட புள்ளிப்பட்டியலில் ஹைதராபாத் அணி 32 புள்ளிகளுடன் 2வது இடத்தையும், சென்னை அணி 16 புள்ளிகளுடன் 7 வது இடத்தையும் பிடித்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here