ISL 2022: சென்னை vs ஜாம்ஷெட்பூர்…, 2வது வெற்றியை பதிவு செய்த ஈஸ்ட் பெங்கால்!!

0
ISL 2022: சென்னை vs ஜாம்ஷெட்பூர்..., 2வது வெற்றியை பதிவு செய்த ஈஸ்ட் பெங்கால்!!
ISL 2022: சென்னை vs ஜாம்ஷெட்பூர்..., 2வது வெற்றியை பதிவு செய்த ஈஸ்ட் பெங்கால்!!

இந்தியன் சூப்பர் லீக் தொடரில் ஈஸ்ட் பெங்கால் அணியானது ஒடிசா அணியை வீழ்த்தி இரண்டாவது வெற்றியை பதிவு செய்துள்ளது. இன்று ஜாம்ஷெட்பூர் அணிக்கு எதிராக சென்னை FC மோத உள்ளது.

இந்தியன் சூப்பர் லீக்:

இந்தியன் சூப்பர் லீக் தொடரில், ஈஸ்ட் பெங்கால் மற்றும் ஒடிசா ஆகிய அணிகளுக்கு இடையே நேற்று போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில், ஈஸ்ட் பெங்கால் அணி தொடக்கத்தில் இருந்தே ஆதிக்கம் செலுத்த தொடங்கியது. இதில், தோங்கோசியம் ஹாக்கிப் மற்றும் நௌரெம் மகேஷ் சிங், 23 வது மற்றும் 35 வது நிமிடங்களில் இரு கோல்கள் அடித்து அசத்தினர். இதனால், ஈஸ்ட் பெங்கால் அணியானது ஆட்டத்தின் முதல் பாதியில் 2-0 என்ற கோல் கணக்கில் முன்னிலை பெற்று இருந்தது.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

இதையடுத்து தொடங்கிய 2வது பாதியில், ஒடிசா வீரர்கள் வேகம் காட்ட, ஈஸ்ட் பெங்கால் அணி மந்தமானது. அதாவது, ஒடிசாவின் பெட்ரோ மார்டின் 2வது பாதியின் ஆரம்பத்தில் அடுத்தடுத்து இரு கோல்களை அடித்து அதிரடி காட்டினார். இதனால், இரு அணிகளும் 2-2 என்ற கோல் கணக்கில் சமநிலையில் இருக்க, ஈஸ்ட் பெங்கால் வீரர்கள் 65 மற்றும் 76 வது நிமிடங்களில் இரு கோல் அடித்து அணியை முன்னிலை பெற வழி செய்தனர்.

புரோ கபடி லீக்: குஜராத் ஜெயண்ட்ஸை வீழ்த்திய பெங்களூரு புல்ஸ்…, முதலிடத்தை தட்டி தூக்கி அசத்தல்!!

இதன் மூலம், ஈஸ்ட் பெங்கால் அணி 4-2 என்ற கோல் வித்தியாசத்தில் ஒடிசாவை வீழ்த்தியது. இதனால், ஈஸ்ட் பெங்கால் அணியானது, இந்த லீக்கில் 2 வது வெற்றியை பதிவு செய்தது. இந்த லீக்கில் இன்று, ஜாம்ஷெட்பூருக்கு எதிராக சென்னை அணியானது தனது சொந்த மண்ணில் மோத உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here