ஐபிஎல் தொடரில் 5வது முறையாக கோப்பையை வென்ற ‘மும்பை இந்தியன்ஸ்’ – பரிசுத்தொகை இத்தனை கோடியா??

0

பலத்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் நேற்று நடைபெற்ற ஐபிஎல் தொடரின் இறுதிப்போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி, டெல்லி கேபிட்டல்ஸ் அணியை வீழ்த்தி 5வது முறையாக கோப்பையை கைப்பற்றி உள்ளது. இதன் மூலம் கேப்டன் ரோஹித் சர்மா புதிய சாதனை படைத்துள்ளார். மும்பை வெற்றியை தொடர்ந்து ரசிகர்கள் கொண்டாட்டத்தில் இறங்கி உள்ளனர்.

ஐபிஎல் தொடர்:

கொரோனா பரவல் காரணமாக ஒத்திவைக்கப்பட்ட ஐபிஎல் தொடர் 2020 பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுடன் ஐக்கிய அரபு அமீரகத்தில் தொடங்கியது. இம்முறை பல எதிர்பாராத திருப்பங்கள் நிகழ்ந்தது. 3 முறை சாம்பியன் ஆன கேப்டன் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தொடர் தோல்விகளால் பிளேஆப் சுற்றுக்கு கூட தகுதி பெறாமல் வெளியேறி அதிர்ச்சி அளித்தது. மறுபுறம் இளம் வீரர்களுடன் அதிரடி காட்டிய டெல்லி கேபிட்டல்ஸ் அணி இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்று அசத்தியது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

பிளேஆப் சுற்றில் வழக்கம் போல சொதப்பிய கோஹ்லியின் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி இறுதி வாய்ப்பை தவறவிட்டது. ஆனால் மறுபுறம் மும்பை இந்தியன்ஸ் அணி சீசன் தொடக்கம் முதலே தனது ஆதிக்கத்தை செலுத்தி வந்தது. கேப்டன் ரோஹித் சர்மா காயம் காரணமாக சில போட்டிகளில் பங்கேற்காதது, பேட்டிங்கில் சொதப்பியது என அனைத்தையும் தாண்டி மற்ற வீரர்களின் சிறப்பான ஆட்டத்தால் புள்ளிப்பட்டியலில் தொடர்ந்து டாப்பில் இருந்து வந்தது.

நேற்று நடைபெற இறுதிப்போட்டியில் டெல்லி கேபிட்டல்ஸ் அணியை எதிர்கொண்டது மும்பை இந்தியன்ஸ். இதில் முதலில் பேட்டிங் செய்த டெல்லி அணி முதல் பந்திலேயே விக்கெட்டை இழந்து தடுமாறியது. பின்னர் வந்த பேட்ஸ்மேன்கள் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 156 ரன்கள் அடித்தது.

Telegram Channel => Join செய்ய கிளிக் பண்ணுங்க!!

மும்பை அணியின் பேட்டிங் அசுர பலத்துடன் இருப்பதால் 157 ரன்கள் இலக்கு ஒன்றும் பெரிதல்ல. கேப்டன் ரோஹித் ஷர்மா, டெல்லி பந்துவீச்சை நாலாபுறமும் சிதறடித்தார். ஒரு கட்டத்தில் ரன் அவுட் ஆக இருந்த ரோஹித் ஷர்மாவிற்காக, சூர்யா குமார் யாதவ் தனது விக்கெட்டை தியாகம் செய்தார். பின்னர் ரோஹித் 68 ரன்களில் பெவிலியன் திரும்பினார்.

பின்னர் இஷான் கிஷன் 33 ரன்கள் அடிக்க, மும்பை அணி 5 விக்கெட்டுகளை இழந்து 18.4 ஓவர்கள் முடிவில் இலக்கை எட்டி வெற்றி பெற்று கோப்பையை கைப்பற்றியது. இதனால் ஐபிஎல் தொடரில் தனது 5வது கோப்பையை கைப்பற்றி புதிய சாதனை படைத்தார் கேப்டன் ரோஹித் ஷர்மா. சாம்பியன் பட்டம் வென்ற மும்பை அணிக்கு 10 கோடி ரூபாய், 2வது இடம் பிடித்த டெல்லிக்கு 6.25 கோடி ரூபாயும் பரிசுத்தொகையாக வழங்கப்பட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here