மழை காரணமாக IPL இறுதிப்போட்டி பாதிப்பு…..,மீண்டும் சிக்கலில் CSK அணி…,

0
மழை காரணமாக IPL இறுதிப்போட்டி பாதிப்பு.....,மீண்டும் சிக்கலில் CSK அணி...,
மழை காரணமாக IPL இறுதிப்போட்டி பாதிப்பு.....,மீண்டும் சிக்கலில் CSK அணி...,

கடந்த மார்ச் மாதம் 30 ஆம் தேதியன்று துவங்கிய இந்தியன் பிரீமியர் லீக் (IPL) போட்டிகள் மே மாதம் 28 ஆம் தேதி வரை நடத்த திட்டமிடப்பட்டிருந்தது. அந்த வகையில், பிளே ஆப் சுற்றுக்கான போட்டிகள் கடந்த வாரத்தில் நடைபெற்றது. இதில், ஒவ்வொரு சுற்றுகளையும் கடந்து சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறியது.

அந்த வகையில், நேற்று நடத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்த IPL 2023 இறுதி ஆட்டம் கனமழை காரணமாக ரத்து செய்யப்பட்டது. தொடர்ந்து, அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் வைத்து இறுதிப் போட்டி இன்று துவங்கியது. இந்த ஆட்டமும் மழையினால் பாதிக்கப்படலாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

தோனி கேப்டனாக இல்லை என்றால்….,சேவாக் கருத்து….,

இதையடுத்து, மாலை 7:30 மணியளவில் துவங்கிய இந்த போட்டியின் முதல் இன்னிங்ஸில் குஜராத் அணி 214 ரன்களை எடுத்தது. இப்போது, 215 என்ற இலக்கை நோக்கி விளையாடத் துவங்கிய சென்னை அணிக்கு ஆரம்பத்தில் அதிர்ச்சி காத்திருந்தது. அதாவது, முதல் ஓவர் நடந்து கொண்டிருக்கும் போதே மைதானத்தில் மழை விழத் துவங்கியது.

இதனால் இன்றைய ஆட்டமும் பாதிக்கப்பட்டுள்ளது. இப்போது, போட்டி தாமதமாக துவங்க இருப்பதால் நடைமுறையில் சில மாற்றங்கள் ஏற்படலாம் என்று கணிக்கப்பட்டுள்ளது. அப்படி நடந்தால், சென்னை அணி 5 ஓவரில் 66 ரன்கள் மற்றும் 10 ஓவரில் 123 ரன்கள் மற்றும் 15 ஓவரில் 171 ரன்கள் எடுக்க நேரிடும் என்று எதிர்பார்க்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here