IPL 2024: முதல் வெற்றியை நோக்கி RCB.. இன்று பஞ்சாப் உடன் பலப்பரீட்சை..!

0
இந்திய ரசிகர்கள் மிகவும் எதிர்பார்த்த, ஐபிஎல் தொடரின் 17 வது சீசன் கடந்த வாரம் முதல் பிரம்மாண்டமாக நடைபெற்று வருகிறது. இத்தொடரின் 6வது லீக் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. பஞ்சாப் மற்றும் பெங்களூர் அணிகள்,  கடந்த சீசனில் 1 போட்டியில் மட்டுமே மோதி உள்ளன. அந்த போட்டியில் பெங்களூர் அணியே வெற்றி பெற்றுள்ளது.
இதற்கு தக்க பதிலடி கொடுக்கும் வகையில், பஞ்சாப் இந்த  ஆட்டத்தில் வெற்றி பெறும் என ரசிகர்களால் எதிர்பார்க்கப்படுகிறது. ஆனாலும் இந்த சீசனில் பெங்களூர் அணி தனது முதல் போட்டியில் சென்னை அணியிடம் தோல்வி அடைந்து உள்ளது. அதேசமயம் பஞ்சாப் அணியானது டெல்லியை வீழ்த்தி உள்ளதும் குறிப்பிடத்தக்கது. இந்த ஆட்டம் இன்று இரவு 7.30 மணிக்கு பெங்களூர் சின்னசாமி மைதானத்தில் அரங்கேற உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here