ஐபிஎல் 2023: மினி ஏலத்துக்கு முன்னாடியே வெளியான பகீர் தகவல்…, இவ்வளோ அமௌன்ட் கையில இருக்கா??

0
ஐபிஎல் 2023: மினி ஏலத்துக்கு முன்னாடியே வெளியான பகீர் தகவல்..., இவ்வளோ அமௌன்ட் கையில இருக்கா??
ஐபிஎல் 2023: மினி ஏலத்துக்கு முன்னாடியே வெளியான பகீர் தகவல்..., இவ்வளோ அமௌன்ட் கையில இருக்கா??

ஐபிஎல் அணிகள், தக்க வைத்துக் கொண்டுள்ள வீரர்களின் எண்ணிக்கை மற்றும் கையிருப்பு தொகை குறித்த முழு விவரங்களை இப்பதிவில் காணலாம்.

ஐபிஎல்:

2023 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள ஐபிஎல் சீசனுக்குக்கான, மினி ஏலம் அடுத்த மாதம் 23ம் தேதி கொச்சியில் நடைபெற இருக்கிறது. இதற்கு முன்னதாக, ஐபிஎல்-லில் உள்ள அனைத்து அணிகளும் தங்களுக்கு வேண்டிய வீரர்களை தக்க வைக்க போகும் வீரர்களின் பட்டியலை நேற்று வெளியிடும்படி பிசிசிஐ அறிவித்திருந்தது. இதன்படி, நேற்று அனைத்து அணிகளும் தங்களுக்கு வேண்டிய வீரர்களின் பட்டியலையும், கையிருப்பில் இருக்கும் தொகைக்கான பட்டியலையும் வெளியிட்டுள்ளது.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

இதில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் தோனி, ஜடேஜா உள்ளிட்ட 18 வீரர்களையும், மும்பை இந்தியன்ஸ் அணியில் ரோஹித் சர்மா, சூர்யா குமார் யாதவ், இஷான் கிஷன் உள்ளிட்ட 16 வீரர்களையும் மாற்றி அமைத்து தக்க வைத்துக் கொண்டு உள்ளனர். மேலும், பஞ்சாப் கிங்ஸ் 15, கொல்கத்தா நைட் ரைடர்ஸ் 14, குஜராத் டைட்டன்ஸ் 18, லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் 15, ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு 18, ராஜஸ்தான் ராயல்ஸ் 16, டெல்லி கேபிடல்ஸ் 20 மற்றும் சன்ரைசர்ஸ் ஐதராபாத் 12 வீரர்களையும் தங்களது அணியில் மாற்றி அமைத்து தக்க வைத்துக் கொண்டுள்ளனர்.

சரவணனுக்கு எதிராக செந்திலை கொம்பு சீவி விடும் அர்ச்சனா.., சிவகாமி வீட்டில் வெடிக்க இருக்கும் பூகம்பம்!!

தற்போது அனைத்து அணிகளிடம் உள்ள கையிருப்பு தொகையானது, சென்னை சூப்பர் கிங்ஸ் 20.45 கோடி, மும்பை இந்தியன்ஸ் 20.55 கோடி, கொல்கத்தா நைட் ரைடர்ஸ் 7.05 கோடி, சன்ரைசர்ஸ் ஹைதராபாத் 42.25 கோடியையும் வைத்துள்ளனர். இவர்களை தொடர்ந்து, ராயல் சார்ஜஸ் பெங்களூர் 8.75 கோடி, ராஜஸ்தான் ராயல்ஸ் 13.20 கோடி, குஜராத் டைட்டன்ஸ் 19.25 கோடி, டெல்லி கேப்பிடல் 19.45 கோடி, லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் 23.35 கோடி, பஞ்சாப் கிங்ஸ் 32.20 கோடியையும் வைத்துள்ளனர். இந்த கையிருப்பு தொகையை வைத்து, வரும் மினி ஏலத்தில் தங்களுக்கு வேண்டிய வீரர்கள் மீது அதிக ரூபாய் கொடுத்து வாங்குவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here